டெஒலொ மலை ஒரே நேரத்தில் அநேக விஷயங்களை செய்வதற்குரிய ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது. இது காலிம்பொங் சுற்றுலாவில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
காலிம்பொங் சுற்றுலாவில் ஒரு நாளை செலவிடுவதற்கான ஒரு அற்புதமான வழி இந்த மலையில் குதிரை சவாரி செய்து அழகிய இடங்களை கண்டு மகிழ்வதுடன் ஷாப்பிங் செய்வதாகும்.
பார்வையாளர்கள் இந்த இடத்தில் உள்ள மாலை நேரப் பனித்துளிகள் மற்றும் இந்த இடத்தை சுற்றியுள்ள பசுமையான தோட்டங்களை கண்டவுடன் உடனடியாக காதல் வயப்பட்டு விடுவார்கள்.
டெஒலொ மலை அடிப்படையில் காலிம்பொங்கின் உயரமான சுற்றுலாத் தலமாகும். மேலும் இது மலை மேல் உள்ள பூங்கா எனவும் அழைக்கப்படுகிறது. நகரத்தின் நெருக்கடியில் இருந்து தப்பித்து தனியாக சில மணி நேரம் செலவிட விரும்பும் பயணிகளுக்கு இது ஒரு உகந்த இடமாகும்.



Click it and Unblock the Notifications