வரதராஜ பெருமாள் கோயில் “ஹஸ்தகிரி கோயில்” என்றும் “அட்டியூரான்” என்றும் பிரபலமாக அழைக்கப்படுகிறது. மஹா விஷ்ணுவுக்காக எழுப்பப்பட்ட இக்கோயில், பன்னிரெண்டு ஆழ்வார்கள் வருகை தந்த 108 கோயில்களுள் ஒன்று என்ற பெருமை வாய்ந்தது.
மற்ற விஷ்ணு கோயில்களைப் போலவே, இக்கோயிலும், காஞ்சிபுரத்தின் விஷ்ணு காஞ்சியில் அமையப்பெற்றுள்ளது. இந்து பண்டிதரான ராமானுஜர், தன் வாழ்வின் ஒரு பகுதியில் இங்கு வாழ்ந்து வந்ததாக நம்பப்படுகிறது.
உள்ளூர்வாசிகள், இக்கோயிலோடு, ஏகாம்பரேஸ்வரர் கோயில் மற்றும் காமாட்சி அம்மன் கோயிலையும் சேர்த்து, மூவரும் வாசம் செய்யும் தலம் என்ற அர்த்தம் விளங்குமாறு, “மும்மூர்த்திவாசம்” என்று அழைக்கின்றனர்.
பெருமாள் கோயில் என்றும் அழைக்கப்பெறும் இக்கோயில், மஹா விஷ்ணுவின் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் தரிசிக்க வேண்டிய ஒரு கோயிலாகும்.
வருடத்திற்கொரு முறை இங்கு நடைபெறும் திருவிழாவால், இக்கோயில் உள்ளூர்வாசிகள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகளிடயே மிகவும் பிரபலமாக உள்ளது.
இத்திருவிழாவின் ஆரம்ப அறிகுறியாக, பெரிய குடைகளைத் தூக்கிச் செல்லும் வழக்கம் உள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில், இங்கு “ப்ரம்மோத்சவம்” என்னும் மற்றொரு பெரிய விழாவும் நடைபெறுகின்றது.



Click it and Unblock the Notifications