காங்க்ரா மாவட்டத்தில் பிரபலமான சுற்றுலாத்தலமாக அறியப்படும் இந்த இரட்டை நகரங்கள் குலேர் வம்சத்தின் பாரம்பரிய அடையாளங்களுக்காக பிரசித்தி பெற்றுள்ளன. காங்க்ரா மற்றும் பஹாரி ஓவியங்களுக்காக இந்த நகரங்கள் கலைரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்குவதும் குறிப்பிடத்தக்கது. தனித்தன்மையான குலேர் பாணி ஓவிய நுணுக்கங்கள் உள்ளூர் வம்சாவளியினரால் பரம்பரைக்கலையாக வளர்க்கப்பட்டு வந்திருக்கிறது.
கடல்மட்டத்திலிருந்து 1811 அடி உயரத்தில் அமைந்திருக்கும் ஹரிபூர் நகரம் ஒரு சிறிய ஆற்றின் மூலம் குலேர் நகரத்திலிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்த சிற்றோடையினால் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு சதுப்பு நிலப்பகுதி ராம்சார் சதுப்பு நிலப்பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது.
இங்கு ஏராளமான புகலிடப்பறவைகள் குளிர்காலத்தில் வருகை தருகின்றன. பல குகைக்குடைவு ஸ்தலங்கள், ஒரு சிதிலமடைந்த கோட்டைப்பகுதி மற்றும் ராஜா ஹரிசந்த் மன்னரால் கட்டப்பட்ட சில கோயில்கள் போன்றவை இந்த நகரங்களிலுள்ள விசேஷ அம்சங்களாக காட்சியளிக்கின்றன.



Click it and Unblock the Notifications