ஹிமாசலப்பிரதேச மாநிலத்தில், காங்க்ரா மாவட்டத்தில் உள்ள பைஜ்நாத் எனும் இடத்தில் இந்த பிரசித்தமான சுற்றுலத்தலமான சித்தநாதா கோயில் அமைந்துள்ளது. அபய் சந்த் எனும் காங்க்ரா ராஜ்ஜியத்தின் மன்னரால் இந்த கோயில் 1758ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது.
சிவனுக்கான இந்த கோயில் இப்பகுதியிலேயே அமைந்துள்ள மஹாதேவா கோயிலைப்போன்றே உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளூர் கதைகளின்படி, பணியா இனத்தை சேர்ந்த பைஜ்நாத் மற்றும் சித்தநாதா என்பவர்களோடு இந்த கோயில்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications