காங்க்ரா ராஜ்ஜியத்தின அரசரானா அபய சந்த் என்பவரால் இந்த சுஜன்பூர் கோட்டை 1758ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது. இந்த அழகிய மாளிகையானது ஹமிர்பூர் நகரத்தில் உள்ள சுஜன்பூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.
பல அழகிய ஓவியங்களுக்கும் இந்த கோட்டை புகழ் பெற்றுள்ளது. பஹாரி ஓவிய பாணி மற்றும் கலையம்சங்களின் ரசிகராக திகழ்ந்த காங்க்ரா மன்னரான சன்சார் சந்த் என்பவர் 19ம் நூற்றாண்டில் முற்பகுதியில் இங்கு வாழ்ந்துள்ளார். காங்க்ரா ராஜ்ஜியத்தை ஆங்கிலேயரிடம் இழந்த பின்னர் அவரும் ராஜ குடும்பமும் இந்த கோட்டையில் ஒதுங்கி வாழ்ந்துள்ளனர்.
இந்த கோட்டையில் உள்ள மாளிகையில் 12 சொகுசு வசிப்பறைகளும் ஒரு கூடமும் அமைந்துள்ளன. சன்சார் சந்த் மன்னரை சந்திப்பதற்காக காங்க்ராவுக்கு வருகை தரும் மற்ற நாட்டு மன்னர்களை தங்க வைத்து உபசரிப்பதற்காக இந்த வசிப்பறைகள் கட்டப்பட்டிருந்தன. பியாஸ் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த கோட்டையில் பராதாரி ஹால் எனப்படும் குறைகேட்புக்கூடமும் அமைந்துள்ளது.
இந்த கோட்டையின் பெரிய வளாகத்தில் தற்போது ஹோலி தின கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. வண்ணமயமான ஹோலி திருவிழா 3-4 தினங்களுக்கு கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்தலத்துக்கு அருகிலேயே நர்பதேஷ்வர், கௌரிஷங்கர் மற்று முர்ளி மனோஹர் ஆகிய பிரசித்தமான கோயில்களும் அமைந்துள்ளன.



Click it and Unblock the Notifications