காங்கேர் மாவட்டத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் இந்த மலாஞ்ச்குடும் நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது. தூத் ஆறு நீலி கொண்டி எனும் இடத்திலிருந்து மலைப்பகுதியில் ஓடி வருகிறது. அங்கிருந்து 10 கி.மீ தள்ளி அதன் பாதையில் மலாஞ்ச்குடும் எனும் இடத்தில் நீர்வீழ்ச்சி உருவாகிறது.
இந்த ஸ்தலத்தில் 10, 15 மற்றும் 9 மீட்டர் உயரங்களிலிருந்து மூன்று நீர்வீழ்ச்சிகள் விழுகின்றன. இந்த நீர்வீழ்ச்சி பார்ப்பதற்கு ஒரு ஏணியின் வடிவத்தில் காட்சியளிப்பது வியப்பான அம்சமாகும். மலாஞ்ச்குடும் நீர்வீழ்ச்சி ஒரு பிரபலமான பிக்னிக் சிற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications