1960-ம் ஆண்டில், இந்தியாவின் முதன்மையான தொழிலதிபர்களில் ஒருவராக விளங்கிய கான்பூரைச் சேர்ந்த ஸ்ரீ பதம் பட் சிங்கானியா என்பவரால் கம்லா ஓய்விடம் என்ற இந்த பிரபலமான சுற்றுலாத்தலம் உருவாக்கப்பட்டது. இந்த ஓய்விடம் கம்லா நேரு சாலையில் உள்ளது.
உண்மையில், இந்த பூங்கா சிங்கானியா குடும்பத்தவரின் தனியார் எஸ்டேட்டாக இருந்தது. சுற்றுலாவாசிகளுக்கு மிகவும் ஏற்ற சில இடங்களில் ஒன்றாக இந்த பூங்காவில் இருக்கும் அருங்காட்சியகத்தில், சில பழமையான தொல்பொருட்களும் மற்றும் வரலாற்று பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஓய்விடத்தில் சில பூங்காக்கள், புல்வெளிகள் மற்றும் படகு சவாரி செய்யும் வசதியுடன் கூடிய கால்வாய்கள் ஆகியனவும் உள்ளன. செயற்கையான அலைகளை உருவாக்கும் திறன் படைத்த ஒரு ஹை-டெக் நீச்சல் குளத்தையும் இங்கே காண முடியும். பல்வேறு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த நீச்சல் குளம் இரவில் அற்புதமான காட்சிகளை கொடுக்கும்.
பல்வேறு வண்ணங்களையுடைய பறவைகள், ஊர்வன மற்றும் விலங்கினங்கள் சுதந்திரமாக சுற்றித் திரிந்து வரும் பசுமையான உயிரியல் பூங்கா ஒன்றும் இங்குள்ளது.
1962-ம் ஆண்டின் இந்தியா-சீனா போருக்கு முன்னர் பாரதப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு மற்றும் சீனாவின் முதல் பிரதமர் சூ-என்-லாய் ஆகியோர் வருகை புரிந்த வரலாற்றுச் சிறப்பினைப் பெற்ற இடமாக இந்த ஓய்விடம் உள்ளது. இந்த பூங்காவிற்கு செல்லும் முன்னர் அனுமதி பெற வேண்டியது அவசியம்.



Click it and Unblock the Notifications