காரைக்குடிக்கு, அருகாமையில் உள்ள விமான நிலையம், திருச்சிராப்பள்ளி என்றும் அழைக்கப்படும் திருச்சியில் உள்ள விமான நிலையமே ஆகும். சர்வதேச விமான நிலையமான இது, காரைக்குடியிலிருந்து சுமார் 90 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மதுரை விமான நிலையமும், காரைக்குடியிலிருந்து சுமார் 90 கி.மீ. தொலைவிலேயே அமைந்துள்ளது. திருச்சி விமான நிலையத்துக்கு, சிங்கப்பூர், துபாய், ஷார்ஜா, குவைத், கொழும்பு மற்றும் கோலாலம்பூரிலிருந்து சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகின்றன.