Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கர்கலா » ஈர்க்கும் இடங்கள் » அட்டூர்

அட்டூர், கர்கலா

15

கர்கலா வரும் பயணிகள் நேரம் இருந்தால் அதன்  புறநகர் பகுதியான அட்டூர் கிராமத்துக்கும் செல்லலாம். இங்கு 1759-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட புனித லாரன்ஸ் தேவாலயம்  சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம்.

இந்த தேவாலயம் திப்பு சுல்தானால் கட்டப்பட்ட ஆலயம் இடிந்து போன பிறகு 3-வதாக  இப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டது. கர்கலாவுக்கு அருகில் உள்ள நக்ரேவில் இரண்டாவதாக கட்டப்பட்ட தேவாலயம் பழமையானதை தொடர்ந்து மத குருமார்கள் புனித லாரன்ஸ் விக்ரகத்தை ஒரு புதிய இடத்துக்கு மாற்ற நினைத்தனர்.

அப்போது தான் அட்டூர் கிராமத்தின் புஷ்கர்னி கரையோரமாக தேவாலயம் ஒன்றை கட்டி அதில் லாரன்ஸ் விக்ரகத்தை வைத்து வழிபட துவங்கினர்.புனித லாரன்ஸ் தேவாலயத்தில் ஆண்டு தோறும் நடக்கும் கர்கோல் கலைவிழாவில் மத வேறுபாடின்றி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கலந்துகொள்வர். இங்கு 1997-ஆம் ஆண்டு, தேவாலயத்தின் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக 100 அடி உயர கோபுரம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

இந்த தேவாலயத்தை தவிர அட்டூர் வருபவர்கள் மகாகணபதி கோயில், விஷ்ணு கோயில் மற்றும் மகாலிங்கேஸ்வரா கோயில் உள்ளிட்ட ஆலயங்களுக்கும் செல்லலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue