கர்கலாவில் உள்ள சதுர்முக பசாதி கர்நாடகாவில் அமைந்திருக்கும் ஜைனர்களின் நினைவுச் சின்னங்களிலேயே மிகவும் அழகானது ஆகும். இதன் 108 அழகிய தூண்களும், கருங்கல் பாளத்தால் கட்டப்பட்ட கூரையை தாங்கி நிற்கும் பாங்கு அலாதியானது.
பசாதியின் நான்கு வெவ்வேறு திசைகளில் உள்ள நான்கு கதவுகளின் காரணமாகவே இதற்கு சதுர்முக பசாதி என்று பெயர் வந்தது. இங்குள்ள கர்ப்பகிருகத்தில் சூர்யதா, மல்லி, ஆரா உள்ளிட்ட சிலைகளையும், யக்ஷி பத்மாவதி மற்றும் 24 தீர்த்தங்கரர்களின் படங்களையும் பயணிகள் பார்க்கலாம். சதுர்முக பசாதி தியானம் செய்ய விரும்புபவர்களுக்கு ஏற்ற இடமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications