கர்கலாவுக்கு வரும் பயணிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் ஹிரியங்காடி. இங்குள்ள ஷயாத்ரி மலைகளுக்கிடையே மிகவும் புகழ் பெற்ற நெமிநாத் பசாதி அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கற்கால கட்டிட அமைப்புகள், ஜைனத் துறவிகளின் சமாதிகள் போன்றவற்றையும் பயணிகள் பார்க்கலாம்.
கர்கலாவின் ஆன்மீக சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்ள ஹிரியங்காடி பொருத்தமான இடமாக இருக்கும். இங்கு வரும் பயணிகள் நெமிநாத் பசாதியோடு சேர்த்து மகாவீரர் கோயில், புஜ்ஜபல்லி பிரம்மச்சாரியா ஆஸ்ரமம், அனந்தநாத் மற்றும் ஆதிநாத் சுவாமி கோயில், பத்மாவதி பசாதி முதலிய புனித ஸ்தலங்களுக்கும் செல்லலாம்.



Click it and Unblock the Notifications