NH 1 எனப்படும் கிராண்ட் டிரங்க் தேசிய நெடுஞ்சாலையின் பாதையில் கர்ணால் உள்ளதால் தரைவழிப்போக்குவரத்து மிக எளிதாக உள்ளது. சண்டிகர் மற்றும் டெல்லிக்கு இடையே இந்நகரம் அமைந்திருக்கிறது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் டெல்லி மற்றும் சண்டிகர் நகரத்தின் இன்டர் ஸ்டேட் பஸ் டெர்மினஸில் இருந்து இந்நகரத்திற்கு பயணம் மேற்கொள்ளலாம்.