கோவிந்தா பய் மெமோரியல் என்ற புராதன சிறப்பு வாய்ந்த கட்டிடம் கோவிந்தா பய் எனும் புகழ்பெற்ற கன்னட கவிஞருக்காக அர்ப்பணிக்கப்பட்டது. காசர்கோட் மாவட்டத்தில் எண்ணற்ற கலைஞர்களும், கவிகளும் பிறந்திருந்தாலும் கோவிந்தா பய்யின் பெயரை போல அவர்கள் வரலாற்றில் அழுத்தமாக இடம் பெறவில்லை.
இந்த மகாகவிக்கு முன்னாள் மதராஸ் அரசு 'பொயட் லௌரேட்' (அரசவைக்கவிஞர்) எனும் சிறப்பு பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. அதோடு நவீன கவிகளில் சிறந்தவராக கருதப்படும் இவர் 'ராஷ்டிர கவி' என்ற பெயராலும் பிரபலமாக அறியப்படுகிறார்.
இப்பேற்பட்ட சிறப்புகளை உடைய மகா கவிஞரின் நினைவாக அவர் பிறந்த ஊரான மஞ்சேஷ்வர் நகரத்தில் கட்டப்பட்டதுதான் இந்த கோவிந்தா பய் மெமோரியல் ஆகும்.



Click it and Unblock the Notifications