காசர்கோட் மாவட்டத்தில் இஸ்லாமிய மதம் நிறுவப்பட்ட வரலாற்றை குறிக்கும் முக்கிய நினைவுச் சின்னமாக மாலிக் தீனர் மசூதி பார்க்கப்படுகிறது. இந்த மசூதியை நிறுவிய மாலிக் இப்னே தீனார் என்பவர்தான் இந்தியாவுக்கு இஸ்லாமிய மதத்தை கொண்டு வந்தவராக கருதப்படுகிறார்.
மாலிக் தீனர் மசூதி இந்தியர்களுக்கு மட்டுமில்லை, உலக முழுக்க உள்ள இஸ்லாமியர்களுக்கும், குறிப்பாக மேற்கு கடற்கரையோரம் வசிக்கும் மக்களுக்கும் புனித ஸ்தலமாக விளங்கி வருகிறது.
இந்த மசூதியில் ஒவ்வொரு ஆண்டும் மாலிக் இப்னே தீனார் அவர்களின் வருகையை நினைவு கூறும் வகையில் வெகு விமரிசையாக திருவிழா ஒன்று நடைபெறும். இதில் இந்தியா முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
மாலிக் தீனர் மசூதி இஸ்லாமிய கட்டிக்கலையில் கட்டப்படுவதற்கு மாறாக பாரம்பரிய கேரள கட்டிடக் கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. இந்த மசூதிக்கு இஸ்லாமியர்கள் மட்டுமின்றி கலாச்சாரம், வரலாறு, கட்டிடக்கலை போன்றவற்றை தெரிந்துகொள்ளும் ஆர்வமுள்ள அனைவரும் வருகை தரலாம்.



Click it and Unblock the Notifications