பாலோர் என்றும் வழங்கப்படும் பில்லாவர் கத்துவா மாவட்டத்தில் அமைந்திருக்கும் தாலுகா ஆகும். பின்னி மற்றும் நாஸ் எனப்படும் இரு ஓடைகளின் கரையில் இவ்வூர் அமைந்திருக்கிறது.
பழங்கால கட்டிடங்கள் மற்றும் கோவில்களுக்காக புகழ்பெற்ற இவ்வூர் 1598-1614ஆம் ஆண்டு ராஜா போபத் அவர்களால் கட்டப்பட்டது. இவ்வூரை ஆண்ட பசோலி ராஜாக்களின் வழி வந்தவர்களை பில்லாவரியாஸ் என்று அழைக்கிறார்கள்.
ஹரிஹரா கோவில் என வழங்கப்பட்டு பின் மஹாபில்வகேஸ்வரர் கோவில் எனப் பெயர் மாறிய சிவன் கோவில் இங்கிருக்கும் புகழ்பெற்ற மதவழிபாட்டு தளமாகும்.
புராணத்தின் படி மகாபாரத சகோதரர்களான பஞ்சபாண்டவர்கள் இங்கு தங்கள் வனவாசம் முடியும் தருவாயில் வந்ததாகச் சொல்லப்படுகிறது. இங்கு ஏராளமாகக் காணப்படும் பில்வா மரங்களால் இந்த இடம் பில்லவார் என வழங்கப்படுகிறது.
பாண்டவர் சிவனை வழிபட்டதாகக் கூறப்படும் இடத்திலேயே இந்த கோவில் நிறுவப்பட்டிருக்கிறது. சிவனின் 11வது அவதாரமாகக் கருதப்படும் அனுமாரின் பலங்காலச் சிலை ஒன்றை நாஸ் நதியில் இருக்கும் ஒரு பாறையின் மேல் காணலாம்.



Click it and Unblock the Notifications