லட்சுமி ஆசிரமம், `சரளா' ஆசிரமம் என்றும் அழைக்கப்படுகிறது. இது மகாத்மா காந்தியின் வழித்தோன்றலான `கேதரின் ஹில்மன்' என்கிற அம்மையாரல், 1948 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
மகாத்மா காந்தியின் மிகப்பெரிய ரசிகரான கேதரின் ஹில்மன், 1931 ல் லண்டன் விட்டு விலகி இந்திய சுதந்திர போராட்டத்தில் காந்தியுடன் தன்னை இணைத்துக்கொண்டார். அதன் பின்னர் அவர் `சரளாபென்' என அறியப்பட்டார். இங்கு வாழும் பெண்களின் கல்விக்காக இந்த ஆசிரமத்தை நிறுவினார்.
இந்த ஆசிரமத்தில், பெண்களுக்கு காய்கறிகள் வளர்த்தல், சுத்தம் செய்தல், மற்றும் சமையல் போன்ற பல்வேறு திறமைகள் கற்பிக்கப்படுகின்றன. இந்த ஆசிரமம் பல ஆதரவற்ற பெண்களுக்கு இருப்பிடமாக உள்ளது.
கௌஸனி பெண்களுக்கு, சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை அமைத்து தருவதை முக்கிய நோக்கமாக கொண்டு இந்த ஆசிரமம் செயல்படுகிறது.



Click it and Unblock the Notifications