`பின்னத்', `கோபால் கோட்' என்கிற மலைச் சிகரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இங்கு உள்ள பின்னத் கோவில் மிகவும் பிரபலமானது. பைரவருக்கான இக்கோயில் சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோவிலின் தெற்கு பகுதியில் ஐந்து கதவுகள் உள்ளன. இக்கோவிலின் கற்பககிரஹ சுவர்கள், மகாதேவர் மற்றும் தேவியின் படங்ளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நடை பெறும் விழா மிகப்பிரபலமானது.
கடல் மட்டத்திலிருந்து 2750 மீ உயரத்தில் அமைந்துள்ள இக்கிராமத்தை, கௌஸனிலிருந்து 5 கி.மீ. தூரத்திற்கு ட்ரெக்கிங் செல்வதன் மூலம் அடையலாம்.



Click it and Unblock the Notifications