சுமித்ரா நந்தன் பந்த் கேலரி, கௌஸனியின் குறிப்பிடத்தக்க சுற்றுலா மையம் ஆகும். இந்த அருங்காட்சியகம், கௌஸனியில் பிறந்த புகழ்பெற்ற சம கால ஹிந்தி கவிஞரான, சுமித்ரா நந்தன் பந்த்தின் நினைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில், அவரது கையெழுத்து பிரதிகள், கவிதைகள், மற்றும் அவரது பிற இலக்கிய படைப்புகளுடன், அவர் பெற்ற விருதுகளும் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.
இங்கு, அவர் எழுதிய இந்தி மற்றும் ஆங்கில புத்தகங்கள், ஒரு பெரிய கண்ணாடி அலமாரியில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்த நாள் இங்கு மிக விமரிசையாக கொண்டடப்படுகிறது. அப்பொழுது அவரின் நினைவாக ஒரு கருத்தரங்கம் நடைபெறும்.



Click it and Unblock the Notifications