ட்ரெக்கிங், கௌஸனியின் மிகப் பிரலமான பொழுது போக்குகளில் ஒன்று. இந்த இமாலய நகரம், சாகசப் பிரியர்களுக்கு மிகப் பிடித்த நகராகும். இங்கு வரும் பயணிகள் பல்வேறு சாகச விளையாட்டுகளை அனுபவித்து மகிழலாம்.
இங்குள்ள மலைப்பாதை, இப்பகுதியிலேயே மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. அவற்றுள் கௌஸனியிலிருந்து டார்சூலா மூலமாக ஆதி கைலாஷை இணைக்கும் மலைப்பாதை முக்கியமானது.
ஆதி கைலாஷ் சிறிய கைலாஷ் எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு படர்ந்துள்ள பனி 'ஓம்' என்கிற வடிவத்தில் காணப்படுகிறது. இங்குள்ள மற்ற மலைப்பாதைகளில் `கௌஸனி-சுந்தர்காந்தா' மலைப்பாதை, மற்றும் `கௌஸனி-சிறிய பின்னத்-பாரா பின்னத்' மலைப்பாதைகள் முக்கியமானவை.



Click it and Unblock the Notifications