Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கௌசாம்பி » வானிலை

கௌசாம்பி வானிலை

கோடைகாலம்

(மார்ச்  முதல் ஜூன்  வரை) : மார்ச் முதல் ஜுன் வரை கோடைக்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் அதிகபட்சம் 45°C  வரை வெப்பநிலை உயரக்கூடும். உஷ்ணக்காற்றுகளும் இக்காலத்தில் வீசுகின்றன.

மழைக்காலம்

(ஜுலை முதல் செப்டம்பர் வரை) : ஜுலை முதல் செப்டம்பர் வரை மழைக்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் தொடர்ச்சியற்ற கனமழை பெய்கிறது. மேலும் நகர்ப்பகுதி ஈரமாகவும் சூழலில் ஈரப்பதம் நிரம்பியும் காணப்படும்.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : டிசம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் இதமான இனிமையான சூழல் காணப்படுகிறது. குளிர்காலத்தில் 12°C  துவங்கி 20°C  வரை வெப்பநிலை நிலவுகிறது. ஜனவரி மாதத்தில் பனிமூட்டமும் அதிகமாக இருக்கும் என்பதால் விமான சேவைகள் நிறுத்தப்படவும் ரயில்கள் தாமதமாவதற்கும் வாய்ப்புண்டு.