மக்நோவா பீலில் உள்ள பிச்சோலா ஆற்றங்கரையில் மக்நோவா தௌல் அமைந்துள்ளது. இது புல்பாரி தௌல் என்றும் அழைக்கப்படுகிறது. வரலாற்றுத் தொடர்புடைய மக்நோவா தௌல் காஸிரங்காவிற்கு அருகிலுள்ள சுற்றுலாத் தலமாகும்.
பழங்காலத்தில் காளி தேவி வழங்கப்பட்ட இடமான மக்நோவா தௌல் புனிதமான இடமாக உள்ளது. 'மான்’ (Maan) இனத்தவர்களின் படையெடுப்பின் காரணமாக இங்கிருந்த காளியின் சிலை மறைக்கப் பட்டது.
அதன் பின்னர், இந்த சிலை மக்நோவா தௌலுக்கு திரும்பவே இல்லை, அது தியோடாலாவில் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்ட்டது.
75 அடிகள் உயரமுள்ள மக்நோவா தௌலில், புலான கார் என்ற இடத்தில் சிலை வைக்கப்பட்டிருந்து. இந்த தௌலின் எல்லையாக 5 அடி உயரமுள்ள சுவர் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.
முந்தைய காலங்களில் மதிப்பு மிக்க சிலைகளும், சிற்பங்களும் இந்த தௌலில் வைக்கப்பட்டிருந்தன. இன்று, இந்த சிலைகளும், சிற்பங்களும் உள்ளூர் மக்களால் களவாடப்பட்டதாக நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications