கந்த்வா நகரின் தென்மேற்குப் பகுதியில், தாதா தர்பாரின் அருகில் அமைந்திருக்கிறது பவானி மாதா திருக்கோவில்.
பார்வதி தேவியின் அவதாரமான மா துர்ஜா பவானியை வழிபடுவதற்காக எழுப்பட்டது இக்கோவில். ஆகவே இக்கோவிலுக்கு துர்ஜா பவானி மாதா திருக்கோவில் என்றும் பெயர் உண்டு.
பார்வதி தேவியின் முக்கியமான திருக்கோவிலான பவானி மாதா கோவிலுக்கு, பல்வேறு இடங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு, அனைத்து குறைகளும், பாவங்களும் நீங்கி நல்ல நிலையை அடைவர் என்பது நம்பிக்கை.
இந்த கோவில் குறித்து பல்வேறு தகவல்கள் நிலவுகின்றன. ராம பெருமான் வனவாசத்தின் போது இங்கு வந்து, 9 நாட்கள் தேவியை வழிபட்டதாகக் கூறுகின்றனர். ஆகியால், இதனைக் கொண்டாடும் வகையில் நவராத்திரியின் போது 9 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.



Click it and Unblock the Notifications