Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கந்த்வா » ஈர்க்கும் இடங்கள் » கௌரி குஞ்

கௌரி குஞ், கந்த்வா

14

பிரபல பின்னணிப் பாடகர் கிஷோர் குமார் கங்குலியின் நினைவாக கட்டப்பட்ட மணிமண்டபம் கௌரி குஞ்.  கந்த்வா நகரில் பிறந்த கிஷோர் குமாருக்கு, இந்நகரோடு மிக நெருங்கிய பந்தம் இருந்தது.

காலம் சென்ற பாடகர் கிஷோர் குமாரின் அண்ணன் அஷோக் குமார் அவர்கள் அடிக்கல் நட்டு மணிமண்டபப் பணிகலைத் துவக்கி வைத்தார். கிஷோர் குமாரின் நினைவாக மணிமண்டபம் அமைந்திருந்தாலும், அவரின் பெற்றோர் கௌரி தேவி மற்றும் குஞ்சிலால் கங்கோபத்யாய் அவர்களின் பெயர்களைச் சேர்த்து கௌரி குஞ் என்று இந்த மணிமண்டபத்திற்குப் பெயரிடப்பட்டிருக்கிறது.

1998 இல், மறைந்த நடிகர் ராஜேஷ் கண்ணா அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. கலை மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளுக்கு மையமாகத் திகழ்கிறது கௌரி குஞ். 

மத்திய பிரதேச அரசும், கந்த்வா நகராட்சியும் சேர்ந்து இந்த மணிமண்டபத்தை நிர்வகித்து வருகிறது.  ரயில் நிலையத்தின் அருகில் அமைந்திருக்கும் இம்மணிமண்டபத்திற்கு, ஐந்து நிமிட நடைபயணத்தில் செல்ல முடியும்.

கலை, நாட்டியம், மற்றும் கலாச்சார நிகழ்வுகளின் பிரியராக இருந்தால், இவ்விடத்தை ஒருமுறை சென்று பார்த்து வாருங்களேன்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue