Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கீச்சன் » ஈர்க்கும் இடங்கள் » கீச்சன் பறவைகள் சரணாலயம்

கீச்சன் பறவைகள் சரணாலயம், கீச்சன்

7

கீச்சன் கிராமத்தில் அமைந்திருக்கும் கீச்சன் பறவைகள் சரணாலயம் பல்வேறு வகையான பறவை இனங்களுக்கு விருப்பமான புகலிடமாக இருந்து வருகிறது. இந்த பறவைகள் சரணாலயத்தை தேடி தென்மேற்கு ஐரோப்பா, கருங்கடல் பகுதி, போலந்து, உக்ரைன், கஜகிஸ்தான், வடக்கு மற்றும் தென் ஆப்ரிக்கா, மங்கோலியா போன்ற பகுதிகளிலிருந்து எண்ணற்ற பறவைகள் வருகின்றன.

அவற்றில் குர்ஜா, கர்கரா மற்றும் குஞ்ச் எனும் மூன்று இனங்களை சேர்ந்த பறவைகளை இங்கு அதிகமாக பார்க்கலாம். அதுவும் குளிர் மிகுந்த ஐரோப்பாவின் பனிக் காலத்தை தவிர்ப்பதற்காக இந்த சரணாலயத்துக்கு பனிக் காலங்களில் அதிக எண்ணிக்கையில் பறவைகள் வந்து செல்கின்றன.

இந்தியாவுக்கு வரும் புலம்பெயர் பறவைகளில் 4000 முதல் 6000 பறவைகள் கீச்சன் பறவைகள் சரணாலயத்துக்கு வருகின்றன. இவற்றில் 'குர்-குர்' என்று ஒலியெழுப்பும் குர்ஜா என்ற இள நாரைகள் 4 முதல் 6 கிலோ எடையும், 3 அடி உயரமும் இருக்கும்.

இதன் குறிப்பிடத்தக்க  'குர்-குர்' ஒலியின் காரணமாகவே இது குர்ஜா என்று அழைக்கப்படுகிறது. இந்த பறவையினம் 40-60 கிலோமீட்டர் வேகத்தில் நெடுந்தூரம் வரை பறக்கும் அளவுக்கு திறன் பெற்றது.

கீச்சன் பறவைகள் சரணாலயத்துக்கு ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த பறவையினங்களை பார்த்து ரசிப்பதற்காக கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue