ஜெய்சல்மேர் பல்ஜில் அமைந்திருக்கும் கிஷன்கர் கோட்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையாகும். இந்தக் கோட்டை மதா, ராம்கர் மற்றும் தனோத் ஆகிய ராஜஸ்தானிய நகரங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது. மேலும் இந்தக் கோட்டை இந்தியா மற்றும் பாகிஸ்தானை இணைக்கும் சாலையில் இருப்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
கிஷன்கர் கோட்டையை பாகிஸ்தானிய இராணுவம் ஹர்ஸ் எனும் பழங்குடியினரின் உதவியுடன் கைப்பற்றிய போது இந்தக் கோட்டை பிரபலமடைய தொடங்கியது. எனினும் தாஷ்கண்ட் ஒப்பந்தத்தின் பிறகு இந்தக் கோட்டை திரும்பவும் இந்தியாவின் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.
ரத்தோர் சாம்ராஜ்யத்தால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கிஷன்கர் கோட்டை இன்றும் இந்திய கட்டிடக் கலைக்கு சிறந்த சாட்சியாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. எனவே சரித்திரம் மற்றும் தொல்பொருள் துறைகளில் ஆர்வமுள்ள பயணிகள் கண்டிப்பாக இந்தக் கோட்டையை தவற விட்டுவிடக் கூடாது.



Click it and Unblock the Notifications