Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொச்சி » வானிலை

கொச்சி வானிலை

நவம்பர் முதல் பிப்ரவரி மாதத்தின் முதல்பாதி வரையிலான இடைப்பட்ட பருவமே கொச்சிக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது. இப்பருவத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கோலாகலங்கள் ஆரவாரமாக கொண்டாடப்படுவதால் பயணிகளும் இவற்றில் பங்கேற்று மகிழவும், ரசிக்கவும் உகந்ததாக இருக்கும். இருப்பினும் கொச்சியை அதன் அமைதியான சூழலில் ரசிக்க விரும்பினால் இந்த கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு இங்கு விஜயம் செய்து மகிழலாம்.

கோடைகாலம்

கொச்சி பிரதேசத்தில் கோடைக்காலமானது வறட்சியுடனும் சுட்டுப்பொசுக்கும் வெப்பத்துடனும் காட்சியளிக்கிறது. புதிதாக வருபவர்களுக்கு இந்த வெப்பத்தை தாங்கிக்கொள்வது நிச்சயம் சிரமமாக இருக்கக்கூடும். குறிப்பாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெப்பம் அதன் உச்சத்தில் காணப்படுகிறது. எனவே இம்மாதங்களில் கொச்சிக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

மழைக்காலத்தில் கொச்சி நகரம் அவ்வளவு விரும்பத்தக்கதாக இருப்பதில்லை. ஏனெனில் சகஜ வாழ்க்கை இக்காலத்தில் ஸ்தம்பித்து விடுகிறது. ஜுலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நீடிக்கும் மழைக்காலம் கடுமையான மழைப்பொழிவை கொச்சிக்கு அளிக்கிறது. மழைக்காலத்தில் கொச்சி பிரதேசம் முழுக்கவே பசுமை போர்த்தி அழகுடன் காட்சியளித்தாலும், வெளியில் ஊர்சுற்றிப்பார்ப்பதும், பொழுதுபோக்கு கேளிக்கைகள் மற்றும் நீர்விளையாட்டுகளில் ஈடுபடுவதும் பயணிகளுக்கு மிக சிரமமாக இருக்கும். எனவே மழைக்காலமும் கொச்சி நகரத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்தது என்று சொல்ல முடியாது.

குளிர்காலம்

அதிர்ஷ்டவசமாக, கொச்சி பகுதியில் டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நிலவும் குளிர்காலமானது பயணிகளுக்கு ஒரு வரவேற்பாகவே காட்சியளிக்கிறது. ஊர் சுற்றிப்பார்க்கவும், பொழுதுபோக்கு அம்சங்களை அனுபவிப்பதற்கும் ஏற்ற இனிமையான மற்றும் குளுமையான சூழல் குளிர்காலத்தில் நிலவுகிறது.