பேரிஜம் ஏரி கொடைக்கானலில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த ஏரி காட்டிற்குள் உள்ளதால் உள்ளே செல்ல உரிய அனுமதி பெற வேண்டும். காலை 9 மணி முதல் மதியம் 3.30 மணி வரையே உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படும்.
இதனுள்ளே காட்டெருமைகள், பாம்புகள் மற்றும் சிறுத்தைகள் ஏரியில் தண்ணீர் பருக அவ்வபோது வந்து செல்லும். நமக்கு யோகம் இருந்தால் இவைகளை காண நேரிடலாம். பலதரப்பட்ட காளான்கள் இங்கே காணக்கூடும்.
நெருப்பு கோபுரம், அமைதி பள்ளத்தாக்கு மற்றும் மருத்துவ காடு ஆகிய தலங்கள் இந்த ஏரியின் அருகில் இருப்பது இவ்விடத்திற்கு கூடுதல் ஈர்ப்பாக அமைந்துள்ளது. காட்டினில் பயணம் செய்ய இது மிகவும் ஏற்ற இடம்.



Click it and Unblock the Notifications