சுற்றுலாப்பயணிகள் தவறாமல் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிற இந்த ஆவணி எனும் இடம் அங்குள்ள ராமலிங்கேஸ்வர கோயில்களுக்காக பிரசித்தி பெற்றுள்ளது. தென்னிந்தியாவின் கயா என்று அழைக்கப்படுகிற இந்த கயா நகரம் கோலார் தங்க வயலிலிருந்து 10 மைல் தூரத்தில் அமைந்துள்ளது.
இந்த கிராமத்தில் சீதா தேவிக்காக உருவாக்கப்பட்ட கோயிலும் உள்ளது. எனவே இது இந்து யாத்ரீகர்களுக்கு ஒரு முக்கியமான புனித ஸ்தலமாக விளங்குகிறது.புராணத்தின்படி சீதாதேவி தன் இரு பிள்ளைகளான லவா மற்றும் குசாவை இங்கு பெற்றெடுத்த தாகவும், இந்த லவ குசாவுக்கும் அவர்களது தந்தையான ராம பிரானுக்கும் இங்கு சண்டை நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இங்கு சுற்றுலாப்பயணிகள் லவா, குசா பிறந்ததாக கூறப்படும் வால்மீகி ஆசிரமம் அமைந்திருக்கும் இடத்தை பார்க்கலாம். புராணத்தின்படி ராமாயணத்தை எழுதிய தெய்வீக முனிவர் வால்மீகி வசித்த ஸ்தலம் இது என்பதால் இது இந்து யாத்ரீகர்கள் மத்தியில் பிரசித்தி பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications