பார்வதியின் அவதாரமான கோலாரம்மாவுக்க்காக அமைக்கப்பட்டுள்ள இந்த கோயில் கோலார் பகுதியின் பிரதான யாத்ரீக அம்சமாகும். ஆங்கில எழுத்தான L வடிவத்தில் திராவிட சிற்பக்கலை வடிவத்தில் கோயில் விமானத்துடன் (கூரை) இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்தலம் 1000 வருடங்களுக்கு முன்பு சோழர்களால் கட்டப்பட்டுள்ளது. மைசூர் ஆண்ட மன்னர்கள் கோலரம்மா தெய்வத்தின் அனுக்கிரகத்தை பெறுவதற்கு இங்கு வந்து வழிபடும் வழக்கத்தை கொண்டிருந்தனர்.கிரானைட் கல்லில் வடிக்கப்பட்டுள்ள இந்த கோயிலின் சிற்பங்களும் அலங்கார வடிவமைப்புகளும் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளை மிகவும் கவர்கிறது. சேளம்மா என்று அழைக்கபடும் தேளுக்கான தெய்வமும் இந்த கோயிலில் அமைந்துள்ளது.
உள்ளுர் நம்பிக்கைகளின் படி இந்த தேள் தெய்வத்தை வழிபட்டால் தேள் கடியிலிருந்து தப்பிக்கலாம் என்று ஐதீகம் உள்ளது. பக்தர்களின் காணிக்கைகளை பெறுவதற்காக இங்கு ஒரு உண்டியலும் உள்ளது.
தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கத்தின் படி பக்தர்கள் இந்த கோயிலின் தரையில் உள்ள ஒரு பிரத்யேக குழியில் ஒரு நாணயத்தைப் போடுவது சம்பிரதாயமாக உள்ளது.



Click it and Unblock the Notifications