Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோலாப்பூர் » ஈர்க்கும் இடங்கள் » மஹாலட்சுமி கோயில்

மஹாலட்சுமி கோயில், கோலாப்பூர்

21

இந்தியாவில் செல்வத்துக்கும் செழுமைக்கும் பொறுப்பான கடவுளாக துதிக்கப்படும் ஸ்ரீ மஹாலட்சுமி தெய்வத்துக்காக இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. கோலாப்பூர் நகரின் மையத்தில் இந்த புராதனமான பழமை வாய்ந்த கோயில் அமைந்துள்ளது. பெண் தெய்வமான சக்தி எழுந்தருளியுள்ள 18  முக்கிய ஆன்மீக ஸ்தலங்களில் இதுவும் ஒன்றாக புராண சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.இங்குள்ள மஹாலட்சுமி தெய்வம் பக்தர்களால் அம்பா பாய் என்று பிரியத்துடன் அழைக்கப்படுகிறது. வருடந்தோறும் லட்சக்கணக்கான யாத்ரீகர்களும் பக்தர்களும் இந்தக்கடவுளை தரிசித்து வேண்டி செல்கின்றனர்.

ஸ்ரீ மஹாலட்சுமி கோயில் இருப்பதாலேயே கோலாப்பூர் இந்தியாவில் ஒரு ஆன்மீக பக்தி ஸ்தலமாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.சாளுக்கிய அரச வம்சத்தை சேர்ந்த கரண்தேவ் மன்னன் ஏழாம் நூற்றாண்டில் இந்த கோயிலை கட்ட ஆரம்பித்ததில் இருந்து  இக்கோயிலின் வரலாற்றுப் பின்னணி துவங்குகிறது.

இக்கோயிலின் கட்டிடக் கலை வடிவமைப்பு பிரசித்தி பெற்ற ஹேமந்த்பதி சிற்பக்கலா மற்றும் கட்டிட வடிவமைப்பு முறையை பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது. பின்னாளில் எட்டாம் நூற்றாண்டில் யாதவ அரச வம்சத்தினர் இந்த கோயிலை அழகுபடுத்தி மேம்படுத்தியுள்ளனர்.

இந்த மஹாலட்சுமி கோயிலின் ஒரு சிறப்பம்சம் என்னவெனில், ஒவ்வொரு நாளும் சூரியனின் கதிர்கள் தெய்வத்தின் சிலையில் பட்டு மயக்க வைக்கும் தங்க நிறத்தில் பிரகாசிக்கும் படி அமைக்கப்பட்டிருக்கிறது.நவராத்திரி போன்ற திருவிழாக்களின்போது பக்தர்கள் இந்தியா முழுவதிலும் இருந்து மஹாலட்சுமி தெய்வத்தை தரிசிக்க கோலாப்பூரில் திரள்கின்றனர். அச்சமயம் கோலாப்பூர் நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு வண்ண மயமாக காட்சி அளிக்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Sun
Check Out
20 Apr,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon