Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொனார்க் » வானிலை

கொனார்க் வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Konark, Indien 30 ℃ Haze, Light Rain With Thunderstorm
காற்று: 6 from the SSW ஈரப்பதம்: 84% அழுத்தம்: 997 mb மேகமூட்டம்: 75%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Monday 20 Aug 28 ℃ 82 ℉ 31 ℃88 ℉
Tuesday 21 Aug 28 ℃ 83 ℉ 31 ℃88 ℉
Wednesday 22 Aug 22 ℃ 71 ℉ 31 ℃88 ℉
Thursday 23 Aug 29 ℃ 83 ℉ 31 ℃87 ℉
Friday 24 Aug 29 ℃ 84 ℉ 32 ℃89 ℉

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் கொனார்க் நகரத்துக்கு விஜயம் செய்ய ஏற்றவையாக உள்ளன. இக்காலத்தில்தான் குளிர்காலம் நிலவுகிறது. இனிமையான பருவநிலை இந்த மாதங்களில் நிலவுவதால் கோயில் வளாகங்களை சுற்றிப்பார்ப்பதற்கு வசதியான சூழல் காணப்படுகிறது. பொதுவாக இக்காலத்தில் 12°C  முதல் 20°C  வரை வெப்பநிலை நிலவுகிறது.

கோடைகாலம்

கொனார்க் நகரம் வெப்பப்பிரதேச பருவநிலையை கொண்டுள்ளது. மார்ச் மாதத்தில் துவங்கும் கோடைக்காலம் ஜூன் மாதம் வரை இப்பகுதியில் நீடிக்கிறது. இக்காலத்தில் அதிகபட்சமாக 45°C  வரை வெப்பநிலை நிலவுகிறது. மேலும் சூழலில் ஈரப்பதமும் அதிகமாக காணப்படும். எனவே கோடைக்காலத்தில் கொனார்க் நகருக்கு சுற்றுலா மேற்கொள்வதை தவிர்ப்பது சிறந்தது.

மழைக்காலம்

ஜுலை மாதத்திலிருந்து கொனார்க் நகரில் மழைக்காலம் துவங்கி செப்டம்பர் மாதம் அல்லது அக்டோபர் துவக்கம் வரை நீடிக்கிறது. தென்மேற்கு மழைப்பருவம் மூலம் இப்பகுதி அடிக்கடி மழைப்பொழிவை பெறுகிறது. வெப்பநிலை 25°C அளவுக்கு குறைந்து காணப்படுகிறது.

குளிர்காலம்

கொனார்க் நகரம் இனிமையான குளிர்காலத்தை பெற்றுள்ளது. அக்டோபர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாத இறுதி வரை இங்கு குளிர்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில்குறைந்தபட்ச வெப்பநிலையாக 12°C  வரை நிலவுகிறது.  குளிர்தாங்கும் உடைகளுடன் இக்காலத்தில் பயணம் மேற்கொள்வது சிறந்தது.