முகப்பு » சேரும் இடங்கள் » கொனார்க் » ஈர்க்கும் இடங்கள்
 • 01மாயாதேவி கோயில்

  மாயாதேவி கோயில்

  மாயாதேவி கோயில் எனும் இந்த கோயில் கொனார்க் நகரத்தின் சூரியக்கோயில் வளாகத்தில் இடம் பெற்றுள்ளது. சாயாதேவி எனும் தெய்வத்துக்காக அமைக்கப்பட்டிருப்பதால் இது சாயாதேவி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு கருவறை மற்றும் முகமண்டபம் அல்லது ஜகமோகனா ஆகிய அமைப்புகளுடன் இந்த கோயில் காட்சியளிக்கிறது.

  ஒரு பீட அமைப்பின்மீது அமைக்கப்பட்டிருக்கும் இந்த கோயிலின் முகமண்டபம் விரிவான கட்டிடக்கலை நுணுக்கங்களை கொண்டுள்ளது. இந்த கோயிலின் கருவறை அமைப்பு மற்றும் முகமண்டபத்தின் வெளிப்புறங்கள் தற்போது சிதிலமடைந்து காணப்பட்டாலும் உட்புற அமைப்புகள் அற்புதமான சிற்பக்கலை அலங்காரங்களுடன் பார்வையளார்களை பிரமிக்க வைக்கின்றன.

  மேலும், இக்கோயிலின் கருவறையில் தெய்வச்சிலைகள் ஏதும் ஸ்தாபிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கோண்டலைட் பாறைகள் எனப்படும் பாறை அமைப்புகள் இந்த கோயிலை சுற்றிலும் வரிசையாக காணப்படுகின்றன.

  சூரியக்கடவுளின் மனைவியான மாயாதேவிக்காக இந்த கோயில் கட்டப்பட்டிருப்பதாக முன்னர் நம்பப்பட்டு வந்தது. ஆனால் இதுவே ஆதி சூரியக்கடவுள் கோயிலாக விளங்கி வந்திருக்கலாம் எனும் உண்மை தற்போது தெரிய வந்துள்ளது.

  சூரியக்கடவுள் கோயிலை தரிசிக்கும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் இந்த மாயாதேவி கோயிலையும்  தவறாது பார்த்து ரசிக்கின்றனர்.  

  + மேலும் படிக்க
 • 02கக்கத்பூர் கோயில்

  கக்கத்பூர் கோயில்

  கக்கத்பூர் கோயில் எனப்படும் இந்த கோயில் கக்கத்பூர் எனப்படும் சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது. கொனார்க் நகரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் இந்த கிராமம் உள்ளது. பிராச்சி ஆற்றின் கரைப்பகுதியில் வீற்றிருக்கும் இந்த கோயில் மங்களா எனப்படும் பெண் தெய்வத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.

  இந்த மங்களா தெய்வம் கக்கத்பூர் கிராமத்தின் குலதெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் வணங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் பூரி ஜகந்தாதர் கோயிலுடனும் இந்த கோயில் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது.

  அங்கு கொண்டாடப்படும் நவகளேபரா எனப்படும் திருவிழாவின்போது கோயில் அர்ச்சர்கர்கள் இந்த மங்களா கோயிலுக்கு வந்து வழிகாட்டுதலை வேண்டுகின்றனர்.

  அதாவது அந்த திருவிழாக்காலத்தின்போது ஜகந்நாதர், சுபத்ரா மற்றும் பாலபத்ரா ஆகியோரது சிலைகளை உருவாக்க தேவையான மரங்களை அடையாளம் காட்டி உதவுமாறு அவர்கள் இந்த மங்களா தேவியிடம் வேண்டுகின்றனர்.

  ஜமு யாத்ரா எனும் மற்றொரு பிரசித்தமான திருவிழாவும் இந்த கக்கத்பூர் கோயிலில் கொண்டாடப்படுகிறது. இது ஹிந்து பஞ்சாங்கத்தின்படி பைசாக் மாதத்தில் முதல் செவ்வாய்கிழமையில் அதாவது ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 14 முதல் மே 15 வரை நிகழ்த்தப்படுகிறது.

  + மேலும் படிக்க
 • 03அஸ்தரங்கா

  அஸ்தரங்கா

  அஸ்தரங்கா எனும் இந்த பிரசித்தமான மீன்பிடிப்பு ஸ்தலம் கொனார்க் நகரத்திற்கு அருகில் உள்ளது. தேவி என்றழைக்கப்படும் ஆற்றின் முகத்துவாரப்பகுதியில் இந்த இடம் அமைந்திருக்கிறது.

  கொனார்க் நகரத்திலிருந்து 19 கி.மீ தூரத்திலுள்ள இந்த அஸ்தரங்கா இங்கு காணப்படும் சூரிய அஸ்தமனக்காட்சிக்காக புகழ்பெற்றிருக்கிறது. ஒரியா மொழியில் ‘அஸ்’த எனும் சொல் சூரிய அஸ்தமனத்தையும் ‘ரங்கா’ எனும் சொல் நிறத்தையும் குறிக்கின்றன.

  சூரிய அஸ்தமனத்தின் போது இந்த கடற்கரை ஸ்தலத்தின் தொடுவான் திசையில் பல்வேறு வண்ணங்கள் ஜொலிப்பதாலேயே இந்த அஸ்தரங்காஎனும் பெயர் ஏற்பட்டுள்ளது.

  இந்த அற்புதமான அஸ்தமனக்காட்சியை கண்டு களிப்பதற்காகவே ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். கடற்கரையிலிருந்தபடி இந்த இடத்தின் ரம்மியமான இயற்கை காட்சிகளை பார்த்து ரசிக்கும் அனுபவம் பார்வையாளர்களால் வெகுவாக விரும்பப்படுகிறது.

  இந்த அஸ்தரங்கா கடற்கரைப்பகுதி உப்புத்தயாரிப்பு மற்றும் மீன்பிடிப்பு ஆகிய தொழில்களுக்கும் புகழ் பெற்றுள்ளது. இந்த கடற்கரையில் உள்ள சிறிய மீன் சந்தையில் புதிய மீன்கள் விற்கப்படுகின்றன.

  விருப்பமுள்ள பயணிகள் இவற்றை வாங்கிக்கொள்ளலாம். காலை நேரங்களில் கடலில் மீன்பிடித்து மீனவர்களையும் அவர்களுக்காக கரையில் காத்திருக்கும் வியாபாரிகளையும் பார்த்து ரசிக்க முடியும்.

  + மேலும் படிக்க
 • 04சந்திரபாகா கடற்கரை

  சந்திரபாகா பீச் என்றழைக்கப்படும் இந்த அழகிய கடற்கரை கொனார்க் சூரியக்கோயில் ஸ்தலத்திலிருந்து  3 கி.மீ தூரத்தில் உள்ளது. குளுமையான கடற்காற்று மற்றும் தூய்மையான கடல் நீர் போன்றவை இங்கு பார்வையாளர்களை வரவேற்று வசீகரிக்கின்றன.

  ரம்மியமான இந்த கடற்கரை பிக்னிக் சிற்றுலாவுக்கு உகந்த ஸ்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. இங்கு நீச்சல், படகுச்சவாரி மற்றும் நடைப்பயணம் போன்ற பொழுதுபோக்குகளில் சுற்றுலாப்பயணிகள் ஈடுபடலாம்.

  அமைதியாக கரையில் அமர்ந்து இயற்கை எழிலை அள்ளிப்பருகவும் இந்த கடற்கரை மிகவும் ஏற்றது. நகரத்தில் பரபரப்பு மற்றும் சந்தடிகளிலிருந்து விலகி அமைந்துள்ளதால் மனதிற்கு சாந்தத்தை அளிக்கும் இயல்புடன் இந்த கடற்கரை காட்சியளிக்கிறது.

  இருப்பினும் வருடாவருடம் நடைபெறும் சந்திரபாக திருவிழாவின்போது இந்த கடற்கரை தன் சாந்தமான இயல்பிலிருந்து முற்றிலும் மாறி பரப்பான கொண்டாட்ட ஸ்தலமாக தோற்றமளிக்கிறது.

  இந்த திருவிழாவின்போது மக்கள் திரளாக இங்கு கூடுவதுடன் கேளிக்கை நிகழ்ச்சிகளும் வண்ண விளக்கு அலங்காரங்களும் இப்பகுதியை ஆக்கிரமிக்கின்றன. மேலும், இங்குள்ள ஒரு கலங்கரை விளக்கத்தின் உச்சியிலிருந்து இந்த கடற்கரையின் அழகை பார்த்து ரசிப்பது மற்றும் ஒரு உன்னத அனுபவமாகும்.

  + மேலும் படிக்க
 • 05வைஷ்ணவக்கோயில்

  வைஷ்ணவக்கோயில்

  வைஷ்ணவக்கோயில் எனும் இந்த அழகிய கோயில் கொனார்க் நகரத்தில் சூரியக்கோயில் வளாகத்திலேயே அமைந்துள்ளது. சூரியக்கோயிலை சூழ்ந்து அமைந்திருக்கும் பல்வேறு சிறுகோயில்களில் இதுவும் ஒன்று.

  சூரியக்கோயில் வளாகத்தில் இயற்கையின் சீற்றத்தில் சிக்கி சேதமடையாமல் மீதமிருக்கும் இரண்டு கோயில்களில் இந்த சிறிய கோயிலும் ஒன்று. இருப்பினும் இந்த கோயிலின் பிரதான கோபுர அமைப்பை தற்போது காணமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வைஷ்ணவக்கோயில் 1956ம் ஆண்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டது என்பது மற்றொரு தகவலாகும்.

  பெரிய செங்கற்கள் பயன்படுத்தப்பட்டு சுண்ணாம்பு மற்றும் மணல் கலவைப்பூச்சு மூலம் இந்த கோயில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. யானைகள் குதிரைகள் போன்ற பல்வேறு மிருக உருவங்கள் இந்த கோயிலின் அலங்கார வேலைப்பாடுகளில் இடம் பெற்றுள்ளன.

  கடவுள் சிலைகள் மற்றும் மனித உருவங்கள் போன்ற சிற்ப அமைப்புகளும் அதிக எண்ணிக்கையில் இந்த கோயிலில் காணப்படுகின்றன. இங்குள்ள சிற்ப வடிப்புகள் மனித வாழ்க்கையின் கொண்டாட்டமான அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சூரியக்கோயிலுக்கு வரும் பார்வையாளர்கள் இந்த வைஷ்ணவக்கோயிலையும் தவறாமல் பார்த்து ரசிக்கின்றனர்.

  + மேலும் படிக்க
 • 06ராமசண்டி

  ராமசண்டி கோயில் ஒடிஷா மாநிலத்தின் பூரி மாவட்டத்தில் கொனார்க் நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது. கொனார்க் பகுதியின் குல தெய்வமாக கருதப்படும் ராமசண்டி எனும் தெய்வத்திற்காக இந்த கோயில் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. உள்ளூர் மக்கள் இந்த தெய்வத்தை மிகுந்த பக்தியுடன் வணங்கி வருகின்றனர்.

  குஷபத்ரா ஆற்றின் கரையில் ஒரு ரம்மியமான இயற்கைச்சுழலின் நடுவே இந்த ராமசண்டி கோயில் வீற்றிருக்கிறது. பூரி ஆன்மீக ஸ்தலத்தின் சக்திபீடங்களில் ஒன்றாகவும் இக்கோயில் விளங்கிவருகிறது.

  இந்த கோயில் ஒரு பீடம் போன்ற மேடை அமைப்பின் மீது நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இதன் தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு சுவர்கள் சூரியக்கடவுளின் உருவங்கள் காட்சியளிக்கின்றன.

  சண்டி தேவியின் உருவச்சிலை இந்த கோயிலின் கருவறையில் கம்பீரமாக அமைக்கப்பட்டிருக்கிறது. கொனார்க் நகரத்திலிள்ள சூரியக்கோயிலைவிட இந்த கோயில் மிக பழமையானதாவும் கருதப்படுகிறது.

  ராமசண்டி கோயிலை ஒட்டிய கடற்கரைப்பகுதி மனம் மயங்க வைக்கும் இயற்கை அழகுடன் காணப்படுவதால் இந்த ஸ்தலத்துக்கு ஒரு பிக்னிக் பயணம் போன்ற நோக்கத்துடன் சுற்றுலாப்பயணிகள் அதிக எண்ணிக்கையில் குடும்பத்துடன் வருகை தருகின்றனர்.

  இங்குள்ள கடற்கரை ஏகாந்தமான சூழலை கொண்டிருப்பதால் இளம் தம்பதியர்களும் இங்கு விரும்பி விஜயம் செய்கின்றனர்.

  + மேலும் படிக்க
 • 07குருமா

  குருமா

  குருமா எனும் இந்த சிறிய கிராமம் கொனார்க் நகரத்தின் முக்கிய சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. இது சூரியக்கோயில் ஸ்தலத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. 1971 மற்றும் 1975ம் ஆண்டுகளில் இங்கு நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளுக்கு பின்னர் இந்த கிராமம் வெளி உலகிற்கு தெரிய ஆரம்பித்தது.

  அகழ்வாராய்ச்சிகளின்போது இக்கிராமப்பகுதியில் ஒரு உயர்ந்த சுவர் அமைப்பு, ஹெருகா அல்லது தருமா சிலைகள், சூரியக்கடவுள் மற்றும் புத்தர் சிலைகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. எனவே அதிலிருந்து இந்த கிராமம் ஒரு புத்த யாத்ரிக ஸ்தலமாகவும் புகழ் பெறத்துவங்கியுள்ளது.

  இந்த புராதன ஸ்தலத்தில் காணப்படும் அமைப்புகள் 9 மற்றும் 10ம் நூற்றாண்டுகளை சேர்ந்த  ஒரு புத்தவிஹாரத்தின் மிச்சங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

  இரண்டு கால்களையும் குறுக்கே போட்டு அமர்ந்த நிலையில் இந்த ஸ்தலத்திலுள்ள புத்தர் சிலை காணப்படுகிறது. அவரது வலது கை பூமிஸ்பர்ச முத்திரையுடனும் இடது கை இடது காலில் வைத்தவாறும் காட்சியளிக்கிறது.

  அது மட்டுமல்லாமல் இந்த சிலையுருவத்தின் தலையில் ஒரு கிரிடமும் கழுத்தில் ஒரு ஆபரண மாலையும் காணப்படுகிறது. மடாலயத்தின் முழு அமைப்பு ஏதும் இந்த ஸ்தலத்தில் காணப்படவில்லை என்றாலும் இந்த தொல்லியல் ஸ்தலத்துக்கு சுற்றுலாப்பயணிகள் மற்றும் புத்த யாத்ரீகர்கள் விருப்பத்துடன் விஜயம் செய்கின்றனர்.

  + மேலும் படிக்க
 • 08சௌராஸி

  சௌராஸி

  சௌராஸி எனும் இந்த சிறிய கிராமம் பிராச்சி ஆற்றின் வலது கரையில் உள்ளது. பராஹி, அமரேஷ்ரவர் மற்றும் லட்சுமிநாராயன் போன்ற தெய்வங்களுக்கான கோயில்கள் இந்த கிராமத்தில் அமைந்துள்ளன. பராஹி அல்லது வராஹி என்று அழைக்கப்படும் தெய்வம் தாய்க்கடவுளான தேவியை குறிக்கிறது.

  10ம் நூற்றாண்டின் முதல் காற்பகுதியில் இந்த பராஹி கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பன்றிமுகத்துடனும் பானை வயிற்றுடனும் இந்த பராஹி அல்லது வராஹி தெய்வம் காட்சியளிக்கிறது. இதன் ஒரு கையில் மீனும் மறு கையில் ஒரு குவளையும் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நெற்றிக்கண் ஒன்றையும் இந்த தெய்வம் கொண்டுள்ளது.

  தாந்திரிக பூஜைச்சடங்கு முறைகளின்படி இந்த தெய்வத்துக்கு பூஜைகள் செய்விக்கப்படுகின்றன. அற்புதமான கட்டிடக்கலை நுணுக்கங்கள் மற்றும் அலங்கார அம்சங்களையும் இந்த கோயிலில் காண முடிகிறது. இந்த கோயிலின் பிராதன வளாகத்தின் முன்பகுதியில் ஒரு செவ்வ வடிவிலான முகமண்டபம் அமைந்திருக்கிறது.  

  இந்த தனித்தன்மையான பராஹி தெய்வத்தை தரிசிக்க ஏராளமான யாத்ரீகர்களும் பயணிகளும் வருகை தந்தவண்ணம் உள்ளனர். இந்த ஸ்தலத்திலுள்ள இதர இரு கோயில்களான அமரேஷ்வர் மற்றும் லட்சுமிநாராயண் போன்றவையும் வெகுவாக பார்வையாளர்களை கவர்கின்றன.

  + மேலும் படிக்க
 • 09சூரியக்கோயில்

  கொனார்க் நகரத்தின் பிரதான அடையாளமான சூரியக்கோயிலை முதன் முதலாக தரிசிக்கும் அனுபவத்தை வார்த்தைகளில் விவரிப்பது கடினம். அப்படி ஒரு நுணுக்கமான புராதன கட்டிடக்கலை அம்சங்களுடன், கடந்து போன ஒரு ஆதி நாகரிகத்தின் வாசனை சிறிதும் மறையாமல் இந்த கோயில் வீற்றிருக்கிறது.

  ஒடிஷா மாநிலத்துக்கே உரிய தனித்தன்மையான கோயிற்கலை மரபின் உச்சபட்சமான அழகியல் அம்சங்களை இங்கு தரிசிக்கலாம். கற்களில் வடிக்கப்பட்ட மஹோன்னத கட்டிடக்கலை அற்புதங்களை கொண்ட இந்திய புராதன சின்னங்களின் மத்தியில் இந்த கோயில் தனக்கென ஒரு தனி இடத்தை கொண்டுள்ளது.  

  இந்த கோயிலில் அழகை தரிசிக்க வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தேடி வருகின்றனர். நரசிம்மதேவா எனும் மன்னரின் ஆட்சிக்காலத்தில் 13ம் நூற்றாண்டில் இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

  இந்த கோயில் வளாகத்தில் 24 சக்கரங்களுடன் ஏழு குதிரைகள் இழுத்துச்செல்லும் ஒரு தேர் அமைப்பு வெகு நுணுக்கமான சிற்பக்கலை அம்சங்களுடன் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. சூரியக்கடவுளின் வாகனமாக இந்த தேர் உருவாக்கப்பட்டிருக்கிறது.

  வெகு உன்னதமான ஒரு கற்பனைப்படைப்பாகவும் மற்றும் கட்டிடச்சிற்பக்கலை நிர்மாணமாகவும் இந்த தேர் அமைப்பு கருதப்படுகிறது. கொனார்க் நகரின் இதர சிறப்பம்சங்கள் யாவற்றையும்விட இது அதிக அளவில் ரசிக்கப்படும் அம்சமாகவும் புகழ் பெற்றுள்ளது.

  1984ம் ஆண்டில் உலகப்பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகவும் இந்த சூரியக்கோயில் அங்கீகரிக்கப்பட்டிருப்பது இதன் மற்றொரு பெருமைக்குரிய அம்சமாகும். கொனார்க் நடனத்திருவிழா எனும் பிரபல்யமான நிகழ்வு இந்த சூரியக்கோயில் வளாகத்தில்தான் ஒவ்வொரு வருடமும் நிகழ்த்தப்படுகிறது.

  இந்த அற்புதமான கோயிலின் சில பகுதிகள் கால ஓட்டத்தில் சிறிது சேதமடைந்து காணப்பட்டாலும் இதன் பொலிவு இன்றளவும் குறையாமல் பார்வையாளர்களை பிரமிக்கச்செய்கிறது.

  + மேலும் படிக்க
 • 10ஆர்க்கியாலஜிகல் மியூசியம்

  கொனார்க் நகரத்தில் உள்ள ஆர்க்கியாலஜிகல் மியூசியம் பிரசித்தமான சூரியக்கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. சூரியக்கோயிலின் பழமை மற்றும் புராதன மஹோன்னதங்கள் போன்றவற்றை தெரிந்துகொள்வதற்காக சுற்றுலாப்பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் இந்த அருங்காட்சியகத்திற்கு விருப்பத்துடன் விஜயம் செய்கின்றனர். இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் புராதன அரும்பொருட்கள் சூரியக்கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

  சூரியக்கோயில் வளாகத்தின் இடிபாடுகளில் சிக்கிக்கிடந்த அமைப்புகளும் சிற்பங்களும் 1968ம் வருடத்தில் தற்போதைய மியூசியம் இயங்கிவரும் இடத்திற்கு மாற்றப்பட்டதில் இருந்து இந்த தொல்லியல் அருங்காட்சியகம் செயல்பாட்டிற்கு வந்தது.

  260 காட்சிப்பொருட்களை கொண்ட நான்கு காட்சிக்கூடங்கள் இங்கு அமைந்துள்ளன. இவை தவிர ஒடிஷா மாநிலத்தின் வேறு சில முக்கியமான புராதன ஸ்தலங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சி ஸ்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட புராதன அரும்பொருட்களும் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன.

  வெள்ளிக்கிழமை தவிர்த்து காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு திறக்கப்படுகிறது.  

  + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Feb,Tue
Return On
21 Feb,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
20 Feb,Tue
Check Out
21 Feb,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
20 Feb,Tue
Return On
21 Feb,Wed