கோரியா மாவட்டத்தில் உள்ள இந்த ரம்மியமான நீர்வீழ்ச்சி ஹஸ்தோ ஆற்றில் உருவாகிறது. மனேந்திரகர் – பைகுந்த்பூர் நெடுஞ்சாலையில் ஹரா நாக்பூர் எனும் இடத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் இந்த நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது. 80-90 அடி உயரத்திலிருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சியை சுற்றி பனிப்படலம் போன்று நீர்ச்சிதறல் பரவி ரம்மியமாக காட்சியளிக்கிறது.
இங்கு ஒரு சிவன் கோயிலும் வீற்றிருக்கிறது. 1936ம் ஆண்டில் கோரியா பகுதியை ஆண்ட ராமானுஜ் பிரதாப் சிங் ஜுதேவ் என்பவரால் சிவராத்திரியில் இங்கு ஒரு திருவிழாச்சந்தை நடத்தும் நடைமுறை துவங்கப்பட்டது. அவ்வழக்கம் இன்று வரை தொடர்ந்து வருகிறது.



Click it and Unblock the Notifications