Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோரியா » வானிலை

கோரியா வானிலை

மிதமான பருவநிலை நிலவும் குளிர்காலத்தில் கோரியா மாவட்டத்துக்கு சுற்றுலா மேற்கொள்வது சிறந்தது. இக்காலத்தில் குளுமையான இனிமையான சூழல் நிலவுவதால் வெளிப்புற இயற்கைக்காட்சிகளை சுற்றிப்பார்த்து ரசிக்க ஏற்றதாக உள்ளது.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் கோரியா மாவட்டத்தில் அதிக உஷ்ணமும் வறட்சியும் நிலவுகிறது. மார்ச் தொடங்கி ஜூன் மாத துவக்கம் வரை இங்கு கோடை நீடிக்கிறது. குறிப்பாக மே மாதத்தில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். இக்காலத்தில் சராசரி வெப்பநிலையாக  குறந்தபட்சம் 30°C  முதல் அதிகபட்சம் 45°C  வரை நிலவுகிறது. இங்கு நிலவும் அதிகபட்சமான வெப்பநிலை சுற்றுலா பயணிகளுக்கு சிரமத்தையே கொடுக்கும்.

மழைக்காலம்

மழைக்காலத்தில் கோரியா மாவட்டம் மிதமான மழைப்பொழிவை பெறுகிறது. அதிக மழையானது ஜுலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கு மழைப்பொழிவு நிலவுகிறது. குறிப்பாக ஜூலை மாதத்தில் இங்கு மழை அதிகமாக இருக்கும்.

குளிர்காலம்

கோரியா மாவட்டத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் வரை குளிர்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் சராசரி வெப்பநிலையாக  அதிகபட்சம் 26°C  முதல் குறைந்தபட்சம் 12°C  வரை நிலவுகிறது.