Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோவளம் » வானிலை

கோவளம் வானிலை

அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான இடைப்பட்ட பருவம் கோவளம் கடற்கரை ஸ்தலத்துக்கு விஜயம் செய்ய ஏற்றதாகும். . குறிப்பாக கடற்கரை பகுதிகளை ரசிப்பதற்கு இந்த மாதங்கள் மிகவும் உகந்தவையாக உள்ளன. கோடைக்காலத்தின் பகல் நேரங்கள் மிகுந்த உஷ்ணத்துடன் காணப்படுவதால் வெளிச்சுற்றுலாவுக்கு அசௌகரியமாக உள்ளது. மழைக்காலத்தில் அதிக மழை காரணமாக திட்டமிட்ட சுற்றுலாவை மேற்கொள்வது மிகவும் சிரமம்.

கோடைகாலம்

தனது புவியியல் அமைப்பு காரணமாக வறண்ட பிரதேச பருவநிலைய கோவளம் பிரதேசம் பெற்றுள்ளது. எனவே இங்கு வரையறுக்கப்பட்ட பருவநிலை என்று குறிப்பிட முடியாத சூழல் நிலவுகிறது. சராசரியாக கோடைக்காலத்தில் வெப்பநிலை 30° C முதல் அதிகபட்சமாக 37° C வரை காணப்படுகிறது. பகலில் இன்னும் கூட உஷ்ணமாக இருக்கலாம். மே மற்றும் செப்டம்பர் மாதத்துக்கு இடைப்பட்ட பருவத்தில் ஈரப்பதமும் அதிகமாக காணப்படுகிறது.

மழைக்காலம்

ஜுன் மாத மத்தியில் துவங்கி செப்டம்பர் மாத பாதி வரை ‘கோவளம் பிரதேசத்தில் மழைக்காலம் நிலவுகிறது. இந்த கடற்கரை ஸ்தலமானது தென்மேற்கு பருவக்காற்றுகளின் பாதையில் உள்ளதால் மழைக்காலத்தில் இடைவிடாத கடுமையான மழைப்பொழிவு காணப்படுகிறது. எனவே கோவளம் நகரின் எல்லா சுற்றுலா ஆரவாரங்களும் இக்காலத்தில் ஓய்வு கொள்கின்றன. சில சமயங்களில் ஏப்ரல் அல்லது மே மாத துவக்கத்தில் கூட மழைக்காலத்தின் ஆரம்ப மழைப்பொழிவை கோவளம் பெறுகிறது.

குளிர்காலம்

கேரளாவின் மற்ற பகுதிகளைப்போல் ‘குளிர் காலத்தில் கோவளத்தில் கடுங்குளிர் நிலவுவதில்லை. பகல் நேரத்தில் கனமான உடைகள் தேவையில்லை என்றாலும், இரவில் வெப்பநிலை 18° C வரை குறைந்து காணப்படுவதால் மேலங்கி போன்ற கனமான உடையணிவது அவசியம்.