Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குதுரேமுக் » வானிலை

குதுரேமுக் வானிலை

அக்டோபரிலிருந்து பிப்ரவரி வரை உள்ள இடைப்பட்ட காலமே குதுரேமுக் பகுதிக்கு விஜயம் செய்ய சிறந்த காலமாக கருதப்படுகிறது. மழைக்காலமும் கோடைக்காலமும் பொதுவாக சுற்றுலாப்பயணிகளால் தவிர்க்கப்படுகிறது.

கோடைகாலம்

( மார்ச் முதல் மே வரை): கோடைக்காலத்தில் குதுரேமுக் பகுதி வெப்பத்துடன் காணப்படுகிறது. பகலில் வெப்பநிலை 35° C வரை உயர்ந்து காணப்படுகிறது. இரவில் 32° C என்ற அளவில் உள்ளது.

மழைக்காலம்

( ஜூன் முதல் செப்டம்பர் வரை): குதுரேமுக் பகுதி மழைக்காலத்தில் கடுமையான மழைப்பொழிவைப்பெறுகிறது. இக்காலத்தில் சுற்றுலா மற்றும் அது தொடர்பான எல்லா செயல்பாடுகளுமே சிரமமான ஒன்றாக இருப்பதால் பயணிகள் மழைக்காலத்தில் இங்கு விஜயம் செய்ய விரும்புவதில்லை.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : குளிர்காலத்தில் குதுரேமுக் பகுதியின் சீதோஷ்ணநிலை மிகுந்த குளுமையுடனும் இனிமையான சூழலுடனும் காணப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலையாக 17° C முதல் 20° C வரை இருக்கும். இருப்பினும் சில சமயம் வெப்பநிலை 10° C வரை கூட குறைய வாய்ப்புள்ளது.