Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குலு » வானிலை

குலு வானிலை

குலலு மலைவாசஸ்தலத்துக்கு பயணம் மேற்கொள்ள மார்ச் முதல் அக்டோபர் வரையான பருவம் ஏற்றதாக உள்ளது. வெளிச்சுற்றுலா அம்சங்கள் மற்றும் இயற்கை அழகை ரசிப்பதற்கு மார்ச் முதல் ஜூன் வரையிலான மாதங்கள் பொருத்தமாக உள்ளன. சாகசப்பொழுதுப்போக்கு அம்சங்களான ஆற்றுப்பரிசல் சவாரி, பாறையேற்றம், மலைநடைப்பயணம் மற்றும் மலையேற்றம் போன்றவற்றுக்கு அக்டோபர் நவம்பர் மாதங்கள் உகந்ததாக காணப்படுகின்றன. மேலும், நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் இப்பிரதேசம் முழுதும் பனி படர்ந்து காணப்படுவதால் பனிச்சறுக்கு விளையாட்டிலும் ஈடுபடலாம்.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை) : குலு பகுதியில்  கோடைக்காலம் மிக இனிமையானதாக காட்சியளிக்கிறது. இக்காலத்தில் சராசரியாக 25°C  க்கு மேல்   வெப்பநிலை உயர்வதில்லை. விரும்பக்கூடிய சூழல் நிலவுவதால் இக்காலத்தில் அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப்பயணிகள் இங்கு விஜயம் செய்கின்றனர்.

மழைக்காலம்

(ஜூலை முதல் ஆகஸ்ட் வரை) : குலு பகுதி  மழைக்காலத்தில் கடுமையான ஆனால் தொடர்ச்சியற்ற  மழைப்பொழிவை பெறுகிறது. இக்காலத்தில் 15°C  முதல் 25°C   வரை வெப்பநிலை காணப்படுகிறது. சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவாக இருக்கும் என்பதால் மழைக்காலத்தில் குலு பகுதியின் சுற்றுலா செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : குளிர்காலத்தில் குலு பகுதி கடுமையான குளிருடன் காட்சியளிக்கிறது. கடுமையான பனிப்பொழிவும் காணப்படும் இக்காலத்தில் 0° Cக்கும் கீழே வெப்பநிலை குறைகிறது.