Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குமரகம் » வானிலை

குமரகம் வானிலை

கேரளத்தின் பாரம்பரிய சொகுசு சுற்றுலா அம்சங்களை குமரகம் சுற்றுலாத்தலத்தில் முழுமையாக அனுபவிப்பதற்கு மழைக்கு பிந்தைய செப்டம்பர் மாதத்திலிருந்து, கோடைக்கு முந்தைய மார்ச் மாதம் வரையிலான பருவமே ஏற்றதாக உள்ளது. இயற்கைக்காட்சிகளை சுற்றிப்பார்த்து ரசிக்கவும், படகுப்பயணம் மற்றும் நீர்விளையாட்டுகள் போன்றவற்றில் ஈடுபடுவதற்குமான உவப்பான சூழல் இக்காலத்தில் நிலவுகிறது. படகுப்பயணங்கள் தடை செய்யப்படுவதால் மழைக்காலத்தை பயணிகள் தவிர்ப்பது நல்லது.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை): குமரகம் சுற்றுலாத்தலத்தில் கோடைக்காலமானது மார்ச் முதல் மே வரை நிலவுகிறது. மிதமான வெப்பம் நிலவும் இக்காலத்தில் அதிகபட்சமாக 37° C வரை மட்டுமே வெப்பநிலை உயர்கிறது. இது இப்பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்த பருவம் அல்ல என்றாலும் பயணிகள் வெளியில் சுற்றிப்பார்ப்பதில் அசௌகரியங்கள் ஏதும் இல்லை.

மழைக்காலம்

(ஜுன் முதல் அக்டோபர் வரை): குமரகம் பகுதியில் ஜுன் மாதத்தில் துவங்கும் மழைப்பொழிவு மழைக்காலம் முழுதும் நீடிக்கிறது. உப்பங்கழி நீர்த்தேக்கத்தின் எழிலை ரசிப்பதற்கு இது ஏற்ற காலம் அல்ல. படகுப்பயணங்களும் இக்காலத்தில் தடை செய்யப்படுகின்றன. இருப்பினும் பலவகை பறவைகளை ரசிக்க விரும்பும் பயணிகள் புகலிடப்பறவைகள் அதிகம் தென்படும் இக்காலத்தை தேர்ந்தெடுக்கின்றனர்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை): குமரகம் பகுதியில் நவம்பர் மாதத்தில் துவங்கும் குளிர்காலமானது பிப்ரவரி மாத கடைசி வரை நிலவுகிறது. வெளிச்சுற்றுலாவுக்கும் படகுச்சுற்றுலாவுக்கும் மிகவும் ஏற்ற பருவமாக இந்த குளிர்காலம் காணப்படுகிறது. குளுமையான சூழல் நிலவும் இக்காலத்தில் மிகக் குறைந்த வெப்பநிலையாக 18° C வரை குறைந்து காணப்படுகிறது.