Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கும்பகோணம் » ஈர்க்கும் இடங்கள் » ஸ்ரீ வெங்கடாசலபதிசுவாமி ஆலயம்

ஸ்ரீ வெங்கடாசலபதிசுவாமி ஆலயம், கும்பகோணம்

37

ஸ்ரீ வெங்கடாசலபதிசுவாமி ஆலயமானது கும்பகோணத்திலிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மகாவிஷ்ணுவும் அவரது தேவியான லட்சுமி தேவியும் வீற்றிருக்கினறனர்.

இக்கோவிலில் மகாவிஷ்ணுவானவர்,  உப்பிலியப்பன், திருவிண்ணகரப்பன், வெங்கடாசலபதி என்னும் நாமகரணங்களால் அழைக்கப்படுகின்றார். இப்பெயர்களனைத்தும் மகாவிஷ்ணுவின் பல்வேறு பெயர்களில் சிலவாகும். இங்குள்ள  லட்சுமி தேவியானவர் பூமிதேவி என்னும் பெயரில் அழைக்கப்படுகிறார்.

இக்கோவிலின் கட்டிட அமைப்பும், கட்டிடக் கலையும் மிகப் பிரம்மாண்டமானவை. வானுயர்ந்த கோபுரங்களுடன் பெரிய பிரகாரங்களைக் கொண்ட கோவில் இதுவாகும். பல்வேறு வேதங்களிலிருந்து வேதப்பகுதிகளும், வரிகளும் ,  பெயர்களும், இக்கோவிலின் சுவர்களிலும், கூரையிலும், கோபுரங்களிலும் பொறிக்கப்பட்டுள்ளன.

இவற்றையெல்லாம் ஒருவர் படித்தாலே இந்து மதக் கலாச்சாரம் மற்றும் சடங்குகள்,  பூசை முறைகளை பற்றித் தெரிந்துகொள்ள முடியும். இக்கல்வெட்டுக்களைப் படித்து அறிந்துகொள்வதற்கும் அதன் மூலம் ஞானம் பெறுவதற்கும் ஏராளமான பக்தர்கள் இங்கு வருகை புரிகிறார்கள்.

மற்ற பெருமாள் கோவில்களைப் போலவே இக்கோவிலிலும், உப்பிட்டு சமைத்த உணவுப்பொருள்கள் நைவேத்தியமாக சுவாமிக்குப் படைக்க அனுமதிக்கப்படுவதில்லை.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Sep,Thu
Return On
11 Sep,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Sep,Thu
Check Out
11 Sep,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Sep,Thu
Return On
11 Sep,Fri