உப்பிலியப்பன் கோவில், கும்பகோணம்

உப்பிலியப்பன் பெருமாள் என்று அழைக்கப்படும் மகாவிஷ்ணுவின் ஆலயமான உப்பிலியப்பன் கோவிலானது கும்பகோணத்தில் உள்ளது. இக்கோவிலில் உப்பிலியப்ப சுவாமியின் மனைவியான பூமி தேவிக்கும், அவரது தந்தையான மார்க்கண்டேய முனிவருக்கும் கோவில்கள் உள்ளன.

மகாவிஷ்ணுவின் 108 திவ்யதேசங்களுள் இக்கோவிலும் ஒன்று. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருநாகேஸ்வரம் என்னும் சிற்றூருக்கு அருகில் இக்கோவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இக்கோவிலுக்கு  சாலை வழியாக எளிதில் செல்லலாம்.

இக்கோவிலுக்கு உள்ளே சமைக்கப்படும் எந்த உணவிலும் உப்பு சேர்க்கப்படக் கூடாது என்று ஒரு ஐதீகம் உள்ளது. யாராவது வேண்டுமென்றே உப்பு சேர்த்து சமையல் செய்தால் அவர்கள் இறைவனின் கோபத்துக்கு ஆளாவார்கள் என்றும் நம்பப்படுகிறது.

இந்நம்பிக்கையின் காரணமாக பெருமாளுக்கு படைக்கப்படும் அனைத்து நைவேத்தியங்களும் உப்பு இன்றியே தயாரிக்கப்படுகின்றன.  பிரம்மோற்சவமும், திருக்கல்யாணமும், இக்கோவிலில் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் திருவிழாக்களில் முதன்மையானவையாகும்.

Please Wait while comments are loading...