ஹைதராபாத் நகரிலுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் கர்னூல் நகரத்திற்கு அருகில் உள்ளது. கர்னூல் நகரத்திலிருந்து இந்த விமான நிலையத்தை அடைவதற்கு மூன்றரை அல்லது நான்கு மணி நேரம் ஆகலாம். மேலும் டாக்சி மற்றும் வேன் வசதிகளும் கர்னூல் வருவதற்கு கிடைக்கின்றன. எல்லா முக்கிய நகரங்களுக்கும் விமான சேவைகளை ஹைதராபாத் விமான நிலையம் கொண்டுள்ளது.