பரிநிர்வாணா ஸ்தூபி மற்றும் மகாபரிநிர்வாணா கோவில் ஆகியவற்றிலிருந்து சுமார் 400 கஜ தூரத்தில் உள்ள மாதா-கௌர் வழிபாட்டுத்தலத்தில், புத்தருடைய மிகப்பெரிய சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது.
பீகாரின் கயா பகுதியில் இருந்து, கொண்டு வரப்பட்ட ஒற்றை நீலக்கல்லால், சுமார் 3.05 மீ உயரத்திற்கு இந்த சிலை வடிவமைக்கப் பட்டுள்ளது. புத்தர் போதிமரத்திற்கடியில் பூமியைத் தொட்டவாறு அமர்ந்திருக்கும் பூமி ஸ்பார்ஷ் முத்திரையில் புத்தருடைய சிலையை அமைப்பதே இதன் நோக்கமாகும்.
இங்கு புத்தருடைய வாழ்க்கையில் அவர் ஞானம் பெற்று, நிர்வாணம் அடைந்த நாட்களில் மிஞ்சியிருக்கும் தெய்வீகம் கலந்த நிகழ்வுகளை குறிப்பிட்டு உணர்த்துவதே இதன் நோக்கமாகும்.
இதன் மூலம், புத்தர் தனது முற்பிறவிகளில் செய்து வந்த சமயப்பணிகளை உறுதிப் படுத்துவதற்காக பூமியை வணங்கி வேண்டிக் கொண்டார் என்று நம்பப்படுகிறது.
இந்த சிலையில் உள்ள எழுத்துருக்கள் பெருமளவு தெளிவாக இல்லாவிட்டாலும், அது 10 அல்லது 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என தெளிவாக எடுத்துக் காட்டுவதாக உள்ளது. மேலும், புத்தர் தனது இறுதி போதனையை இந்த இடத்தில் தான் வழங்கினார் என்றும் நம்பப்படுகிறது.
1876-ம் ஆண்டில் நடந்த அகழ்வாய்வுகளின் போது இந்த சிலையை கார்ல்லேய்லே கண்டுபிடித்தார். அப்பொழுது இரண்டாக உடைந்திருந்த இந்த சிலையை செப்பனிட்டு, அதன் உண்மையான உருவத்தில் இந்த கோவிலுக்குள் 1927-ம் ஆண்டு வைத்தார்கள்.



Click it and Unblock the Notifications