Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குஷிநகர் » ஈர்க்கும் இடங்கள் » வாட் தாய் கோவில்

வாட் தாய் கோவில், குஷிநகர்

21

வாட் தாய் குசிநாரா சாலெர்மாராஜ் கோவில் என்ற இந்த கோவில் சுருக்கமாக வாட் தாய் கோவில் என்று அழைக்கப்படுகிறது. தாய்லாந்தைச் சேர்ந்த புத்தருடைய சீடர்கள், அவர்களுடைய அரசர் பூமிபோல் அதுல்யாதேஜ் என்பவர் பதவிக்கு வந்து ஐம்பது வருடங்கள் ஆனதை சிறப்பிக்கும் பொன்விழா பரிசாக இந்த கோவிலை இந்தியாவில் கட்டினார்கள்.

இந்த கோவிலை கட்டும் பணியை தாய்லாந்து மன்னராட்சியின் முதன்மை குடிமகனாக இருந்த சோம்தேஜ் ப்ரா யான்சங்வாரா என்பவர் 21 பிப்ரவரி 1999-ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.

இந்த கோவில் 2001-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு பக்தர்களுக்காக திறக்கப்பட்டது. இந்த கோவில் கட்டுவதற்கான பொருளுதவி தாஹி பௌத்தர்களிடமிருந்து பெறப்பட்டது.

இந்த கோவில் உண்மையில், காட்டுக்குள் இருக்கும் மடாலயமாகவே எழுப்ப முயற்சி செய்யப்பட்டது, அதனால் தான் இந்த கோவிலைச் சுற்றிலும் பல வகைகளில் அடர்த்தியான மரங்கள், புதர்கள் மற்றும் செடிகள் உள்ளன.

தாய்லாந்து-இந்திய கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில், சுமார் 10 ஏக்கர்களுக்கு பரந்து விரிந்திருக்கும் பரப்பளவில் உள்ள பெரிய வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது. கோவில் மட்டுமல்லாமல், இந்த வளாகத்தில் மடாலயம், தோட்டம், மருத்துவ மையம், பள்ளி மற்றும் நூலகம் ஆகிய இடங்களும் உள்ளன.

குஷிநகரில் உள்ள மிகவும் அழகிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கும் இந்த இடத்திற்கு, குறிப்பாக தாய்லாந்தில் இருந்து ஆயிரக்கணக்கான புனிதப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இதன் மாபெரும் கட்டிடங்கள், நகரத்தின் எந்த பகுதியிலிருந்தாலும் கண்ணுக்குத் தெரியும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Sep,Thu
Return On
11 Sep,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Sep,Thu
Check Out
11 Sep,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Sep,Thu
Return On
11 Sep,Fri