காசியா-தாம்குஹி சாலையில் துர்க்பாட்டி என்று அழைக்கப்படும் சூரியனார் கோவில், குஷிநகரிலிருந்து சுமார் 17 கிமீ தொலைவில் உள்ளது. சூரியனார் கோவிலைப் பற்றிய குறிப்புகள் புராண காலத்தைச் சேர்ந்ததாக இருப்பதால், சிக்கந்த புராணம் மற்றும் மார்க்கண்டேய புராணம் ஆகியவற்றிலும் இக்கோவில் பற்றிய குறிப்புகள் உள்ளன.
இந்த பகுதியில் 4வது, 5வது, 8வது மற்றும் 9வது நூற்றாண்டுகளில் செய்யப்பட்ட அகழ்வாய்வுகளின் போது கண்டெடுக்கப்பட்ட இரண்டு சூரியக் கடவுள்களின் சிலைகள் தான் இப்போதைய சூரியனார் கோவிலின் சிலைகளாக வைக்கப்பட்டுள்ளன என்று நம்பப்படுகிறது.
இந்த பகுதி மக்களால் நீலமணி கல் என்று அழைக்கப்படும் கருப்பு கல்லினால் இந்த சிலைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கோவில் குப்தர் வம்சத்தின் ஆட்சியின் போது கட்டப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் முதல் தொல்பொருள் சர்வேயரான ஜெனரல்.ஏ.கன்னங்ஹாம் என்பவர் 1876-ம் ஆண்டு மேற்கொண்ட அகழ்வாய்வுகளின் போது இந்த பழமையான கோவில் கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் புனரமைக்கப்பட்டு 30 ஜுலை 1981-ம் நாள் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது.
இந்த கோவிலுக்கு திங்கள் கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வருவது மிகவும் புனிதமானது என்று கருதப்படுகிறது. கார்த்திக் மாதத்தின் 6-ம் நாள் மற்றும் பல்கன் மாதத்தின் 13-ம் நாள் ஆகிய நாட்களிலும் மற்றும் ஜென்மாஷ்டமி திருவிழாவின் போதும் பெருந்திரளான மக்கள் இந்த கோவில் வரும் இடமாக உள்ளது.



Click it and Unblock the Notifications