லாட்னூன் நகரில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் ஸ்தலமான திகம்பர ஜெயின் பாரா கோயில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. இந்தக் கோயில் ஜைன தீர்த்தங்கரர்களின் எழில் கொஞ்சும் சிலைகளுக்காகவும், சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த தூண்களுக்காகவும், அரிய கலைப்பொருட்களின் சேகரிப்புகளுக்காகவும், தொன்மை வாய்ந்த ஜைன கையெழுத்து பிரதிகளுக்காகவும் பயணிகள் மற்றும் பக்தர்கள் மத்தியில் வெகுப்பிரபலம்.
திகம்பர ஜெயின் பாரா கோயிலின் கதவுகள் ஒன்றில், இந்தக் கோயில் 8-ஆம் ஆஸாத் சுக்லா மன்னரால் 1136-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக பொறிக்கப்பட்டுள்ளது. இந்த தொன்மை வாயாந்த கோயிலின் இரண்டு வேத அறைகளில் பயணிகள் 2-ஆம் தீர்த்தங்கரர் அஜித்நாத்ஜி மற்றும் 16-ஆம் தீர்த்தங்கரர் சாந்திநாத்ஜி ஆகியோரின் சிலைகளை பார்க்கலாம். அதோடு இந்த சிலைகளுக்கு முன்புள்ள கதவுகள் கலையம்சத்துடன் அலங்கரிக்கப்பட்டிருக்கும் பாங்கு அற்புதமானது.
மேலும் இந்தக் கோயிலில் உள்ள ஜைன தீர்த்தங்கரர்களின் 166 சலவைக்கல் சிற்பங்கள் ஒவ்வொன்றும் அற்புத கலைப் படைப்புகள். இவைதவிர உலோகங்களால் செய்யப்பட்ட எண்ணற்ற சிலைகளை இங்கு பயணிகள் பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications