செயின்ட் மேரி தேவாலயம் லாண்ஸ்டவுனில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலா மையமாகும். இது ராயல் பொறியாளரான கலோனல் A.H.B. ஹியூம் என்பவரால் 1895 ல் கட்டப்பட்டது.
இந்த தேவாலயம் 1947 ஆம் ஆண்டிற்கு பிறகு மூடப்பட்டது. பின்னர், இது கர்வால் ரைஃபிள் ராணுவ மையத்தால் சீரமைக்கப்பட்டு, அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.
சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் புகைப்படங்கள் இங்கு காட்சி படுத்தப்படுகின்றன. இப்பாசறையின் வரலாறு, மற்றும் வளர்ச்சி ஆகியன இங்கு ஆடியோ மற்றும் வீடியோ காட்சிகளாக காண்பிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications