லொனார் நகரில் உள்ள தைத்யா சுடன் எனும் கோயிலின் வடிவமைப்பு பார்ப்பதற்கு புகழ்பெற்ற கஜுராஹோ கோயிலை போன்றே இருக்கும். விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில் 6 மற்றும் 12-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது. இந்த காலங்களில் தான் இந்தியா சாளுக்யா சாம்ராஜ்யத்தின் ஆட்சியின் கீழ் இருந்தது.
இந்தக் கோயிலின் வடிவமைப்பு ஒழுங்கில்லாமல், சமச்சீரற்ற நட்சத்திரம் போன்று காணப்படும். மேலும் இதன் வடிவம் ஹேமத்பதி கோயிலையும் ஒத்திருக்கும்.
இங்குள்ள வழிபாட்டு பகுதிகளில் அழகழகான சிற்ப வேலைப்பாடுகள் சுவர்களில் செதுக்கப்பட்டுள்ளதை பயணிகள் காணலாம். ஆனால் கோயில் இருள் சூழ்த்து இருப்பதால் ஏதேனும் மின்னொளி கருவிகளோ, விளக்குகளோ இல்லாமல் இந்த சிற்பங்களின் அழகை ரசிக்க முடியாது.
இக்கோயில் விக்ரகம் உலோகத்தால் செய்யப்பட்டிருந்தாலும், பார்பதற்கு கற்சிற்பம் போன்று தெரியும். இந்த சிலையின் அடிப்பீடம் 1.5 மீட்டர் அளவில் அமைந்திருக்கிறது.
அதோடு பிரமிட் வடிவில் காணப்படும் கோயிலின் கோபுரம் முடிவு பெறாமல் இருப்பது திட்டமிட்டே கட்டப்பட்டுள்ளது. இதன் வெளிப்பிரகார சுவர்களில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் சாளுக்யா காலத்தின் வரலாற்று ஆவணமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications