Search
 • Follow NativePlanet
Share

யாவத்மால் – இன்பம் பொங்கும் விடுமுறை காலம்!

9

மஹாராஷ்டிரா மாநிலத்தில் யாவத்மால் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் இந்த யாவத்மால் ஆகும்.  விதர்பா பிரதேசத்தில் 1,460 அடி உயரத்தில் அமைந்துள்ள இது சந்திரபூர், பர்பானி, அகோலா மற்றும் அம்ராவதி மாவட்டங்களால் சூழப்பட்டுள்ளது.

யாவத்மால் என்ற பெயரானது மராத்தி மொழியில்  ‘மலை’ என்ற பொருளைத்தரும் ‘யாவத்’ எனும் சொல்லையும், ‘வரிசை’ என்ற பொருளைத்தரும் ‘மால்’ என்ற சொல்லையும் சேர்த்து உருவாகியுள்ளது.

வரலாற்றுப்பின்னணி

யாவத்மால் நகரத்தின் வரலாற்றுப்பின்னணியை நோக்கும்போது இது பல புகழ்பெற்ற ராஜவம்சங்களால் ஆளப்பட்டிருப்பது புலனாகிறது. இவை எல்லாமே யாவத்மால் நகரத்தின் வளர்ச்சி, பாரம்பரியம் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க பிரத்யேகமான பங்களிப்புகளை அளித்து விட்டுச் சென்றிருக்கின்றன.

யாவத்மால் என்று அறியப்படுவதற்கு முன்னர் இந்த நகரம் யவடேச்சா மஹால் என்றும் யோத்-லோஹார் என்றும் அழைக்கப்பட்டிருக்கின்றது. அக்காலத்தில் பீரார் பகுதியின் தக்காண சுல்தான் ஆளுகையின் கீழ் முக்கிய நகரமாக இது திகழ்ந்திருக்கிறது.

அஹமத்நகர் அரசர்களிடமிருந்து முகலாயரால் கைப்பற்றப்பட்ட இந்நகரம் கடைசி முகலாய மன்னருக்கு பிறகு மராத்தாக்கள் வசம் வந்துள்ளது. இறுதியில் ஆங்கிலேயர்கள் இப்பகுதியை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.

சிட்டி ஆஃப் சென்ட்ரல் இந்தியா என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட இது பின்னர் மஹாராஷ்டிரா மாநிலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

யாவத்மால் குறித்த முக்கிய தகவல்கள்

யாவத்மால் நகரம் இங்குள்ள புராதனமான கோயில்கள் மற்றும் ரம்மியமான சிற்றுலாத்தலங்களுக்கு பெயர் பெற்று விளங்குகிறது. நரசிம்மர் கோயில், தத்தா மந்திர், கலம்ப், கடேஷ்வர் மஹாராஜ் கோயில் இங்குள்ள முக்கியமான ஆன்மீக திருத்தலங்களாகும்.

இவை தவிர, ஜகத் கோயில் மற்றும் கோஜோச்சி மசூதி போன்றவையும் யாவத்மால் நகரில் அமைந்துள்ளன.

யாவத்மால் அருகிலுள்ள கலாம்ப் எனும் சிறு கிராமத்தில் சிந்தாமணி கணேஷ் என்றழைக்கப்படும் ஒரு பிரசித்தமான நிலவறைக்கோயில் அமைந்துள்ளது. அதன் அருகாமையிலேயே கணேச குண்டம் எனும் புண்ணிய தீர்த்தமும் அமைந்துள்ளது.

பைன்கங்கா காட்டுயிர் சரணாலயம் மற்றும் திபேஷ்வர் காட்டுயிர் சரணாலயம் போன்றவையும் இங்கு யாவத்மால் பகுதியில் இயற்கை மற்றும் காட்டுயிர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான அம்சங்களாக அமைந்துள்ளன.

குளிர்காலத்தில் விஜயம் செய்வதற்கு ஏற்ற சூழலுடன் காணப்படும் யாவத்மால் நகருக்கு விமானம், ரயில் மற்றும் சாலை மார்க்கமாக எளிதில் பயணம் மேற்கொள்ளலாம்.

யாவத்மால் சிறப்பு

யாவத்மால் வானிலை

யாவத்மால்
37oC / 98oF
 • Partly cloudy
 • Wind: NW 25 km/h

சிறந்த காலநிலை யாவத்மால்

 • Jan
 • Feb
 • Mar
 • Apr
 • May
 • Jun
 • July
 • Aug
 • Sep
 • Oct
 • Nov
 • Dec

எப்படி அடைவது யாவத்மால்

 • சாலை வழியாக
  யாவத்மால் நகரமானது சாலை மார்க்கமாக சுலபமாக சென்றடையும்படியாக அமைந்துள்ளது. நாக்பூர் அல்லது ஹைதராபாதிலிருந்து தேசிய நெடுஞ்சாலை எண் 7 வழியாக யாவத்மால் நகரை அடையலாம். அம்ராவதியிலிருந்து சந்திரபூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையும் யாவத்மால் வழியாக செல்கிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் மாநில அரசுப்பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் யாவத்மால் நகரத்துக்கு இயக்கப்படுகின்றன. பயணக்கட்டணங்கள் பேருந்து வசதியைப் பொறுத்தே அமைந்துள்ளன.
  திசைகளைத் தேட
 • ரயில் மூலம்
  யாவத்மால் ரயில் நிலையம் மஹாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய நகரங்களான புனே, மும்பை, நாக்பூர் மற்றும் அஹமத்நகர் போன்றவற்றுடன் நிறைய ரயில் சேவைகளைக்கொண்டுள்ளது. ரயில் மூலம் பிரயாணம் செய்வது இனிமையான அனுபவமாக இருப்பதுடன் சிக்கனமாகவும் உள்ளது. நாக்பூரிலிருந்து யாவத்மாலுக்கு ரயில் மூலம் செல்ல விரும்பினால் சாதாரண இரண்டாம் வகுப்பு கட்டணம் 100 ரூபாய் என்பதாகவே உள்ளது.
  திசைகளைத் தேட
 • விமானம் மூலம்
  யாவத்மால் நகரத்திலிருந்து 140 கி.மீ தூரத்தில் நாக்பூரிலுள்ள டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து எல்லா முக்கிய இந்திய நகரங்களுக்கும் தினசரி விமான சேவைகள் உள்ளன. இந்த விமான நிலையத்திலிருந்து யாவத்மால் வருவதற்க்கு டாக்சிகள் மற்றும் வேன் வசதிகள் கிடைக்கின்றன. கட்டணம் கி.மீ க்கு 7 ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். இது தவிர ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையமும் யாவத்மால் நகரத்திலிருந்து 469 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
  திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
28 Jan,Tue
Return On
29 Jan,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
28 Jan,Tue
Check Out
29 Jan,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
28 Jan,Tue
Return On
29 Jan,Wed
 • Today
  Yavatmal
  37 OC
  98 OF
  UV Index: 9
  Partly cloudy
 • Tomorrow
  Yavatmal
  34 OC
  94 OF
  UV Index: 9
  Sunny
 • Day After
  Yavatmal
  35 OC
  95 OF
  UV Index: 9
  Sunny