Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » யாவத்மால் » வானிலை

யாவத்மால் வானிலை

யாவத்மால் பகுதி வருடத்தில் பெரும்பான்மையான காலம் வெப்பமான மற்றும் வறண்ட சீதோஷ்ண நிலையைக் கொண்டிருக்கிறது. இங்கு மழையின் அளவு மிகக்குறைவாகவே உள்ளது. மழைக்கு பிந்தைய மற்றும் குளிர்காலத்தை உள்ளடக்கிய அக்டோபர் முதல் பிப்ரவரி உள்ள இடைப்பட்ட காலம்  யாவத்மால் நகருக்கு விஜயம் செய்ய ஏற்ற காலமாக உள்ளது.

கோடைகாலம்

யாவத்மால் பகுதியில் கோடைக்காலம் அதிக வெப்பத்துடன் காணப்படுகிறது.  மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நிலவும் இக்காலத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 45°C  வரை செல்கிறது. எனவே அனல் காற்று வீச்சும் கோடைக்காலமானது பயணம் மற்றும் சுற்றுலாவுக்கு தவிர்க்கப்படவேண்டியதாக உள்ளது.

மழைக்காலம்

யாவத்மால் பகுதி மழைக்காலத்தில் குறைந்த அளவு மழையையே பெறுகிறது.  ஜுன் முதல் செப்டம்பர் வரை நிலவும் மழைக்காலத்தில் ஜுலை மாதத்தின்போது அதிகமான மழைப்பொழிவினை இப்பிரதேசம் பெறுகிறது. மழையை விரும்பும் பயணிகள் இக்காலத்தில் யாவத்மால் பகுதிக்கு விஜயம் செய்யலாம்.

குளிர்காலம்

யாவத்மால் பகுதியில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை குளுமையான குளிர்காலம் நிலவுகிறது. இக்குளிர்காலத்தில் மிகக் குறைந்தபட்ச வெப்பநிலையாக  5°C  வரை காணப்படுகிறது. பகல் பொழுது குளுமையுடன் அதிகபட்சமாக இருபது டிகிரிகள் வெப்பநிலை என்ற அளவில் காணப்படுகிறது.  இரவுகள் கடுங்குளிருடன் இருப்பதால் இக்காலத்தில் பயணிகள் குளிர்காலத்துக்கான பிரத்யேக ஆடைகளுடன் பயணம் செய்வது அவசியமாகும்.