Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லக்னோ » ஈர்க்கும் இடங்கள் » அமீனாபாத்

அமீனாபாத், லக்னோ

59

இந்த அமீனாபாத் எனும் மார்க்கெட் பகுதி லக்னோ நகரத்தில் ஷா ஆலம் என்பவரால் 1759 – 1806 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டிருக்கிரது. இவர் இங்கு ஒரு இமாம்பாரா, ஃபீல்கானா மற்றும் தோட்டத்தை ஒட்டிய அங்காடிகள் போன்றவற்றை உருவாக்கியுள்ளார்.

அவரது மரணத்திற்குப்பின் அவரது மனைவி இந்த மார்க்கெட் பகுதியை நவாப் வாஜித் அலி கானின் அமைச்சராக இருந்த அமீனா உத் தௌலா என்பவருக்கு விற்றுள்ளார்.

இவர் இந்த மார்க்கெட் பகுதியில் மேலும் தோட்டங்கள், பூங்காக்கள், மாளிகைகள்  மற்றும் மசூதி போன்றவற்றை உருவாக்கி அமீனாபாத் என்றும் பெயரிட்டுள்ளார்.

இன்றும் ஒரு பெரிய மார்க்கெட் வளாகமாக அமைந்திருக்கும் இந்த அமீனாபாத் வளாகத்தில் 1911ம் ஆண்டில் லெஃப்டினண்ட் ஹெவிட் என்பவரால் துவங்கப்பட்ட ஒரு பூங்கா ஒன்றும் இடம் பெற்றுள்ளது. லக்னோ நகரின் மையப்பகுதியில் இந்த அமீனாபாத் வீற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

165 வருடங்கள் பழமையான இந்த மார்க்கெட் வளாகத்துக்குள்ளேயே பல்வேறு மார்க்கெட்டுகள் அமைந்திருக்கின்றன. இவற்றில் பர்தாப் மார்க்கெட், ஸ்வதேஷி மார்க்கெட் மற்றும் மோகன் மார்க்கெட் என்பவை குறிப்பிடத்தக்கவை.

இங்குள்ள துண்டே கபாப், திவிவேதி சாரீஸ், பிரகாஷ் குல்ஃபி, மாதாபாதல் பன்சாரி போன்ற கடைகள் மிகப்பிரபல்யமான வியாபார அடையாளங்களாகவே மாறிவிட்டன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue